வந்துவ ணங்கினர்மேல் அந்தர துந்துபிகேள்
வாரு டாடாதே.
கொங்கைசு மந்திடைநூ லஞ்சும் அணங்கனையார்
கூடா ஊடாரோ
கொண்டவ ரந்தருவாய் அண்டர்பெ ருந்தவமே
கோமான் ஆமாநீ
செங்கமலந்தனிலே பைங்குமு தங்களிலே
சேல்பாய் வானாடா
தென்றலு டன்றமிழ்தேர் தென்பொதி யம்பயில் வாழ்
தேனார் தார்மார்பா
சங்குவ லம்புரிசூழ் செந்தில்வ ளம்பதியாய்
தாலோ தாலோலோ
சங்கரி தன்குமரா மங்கையர் தங்கணவா
தாலோ தாலேலோ.
(அ-ரை) மங்கலம்-சுபம். அந்தர
துந்துபி-தேவவாத்தியம். வார்-கச்சு. ஊடாரோ-ஊடல்செய்யமாட்டாரோ. கோமான் ஆமா-தலைவன்
ஆகுமா தேன்ஆர்-தேன்பொருந்திய-சங்கரி-உமை.
(25)
வேறு
மரகத வடிவம் செங்கதிர் வெயிலால்
வாகாய் வாடாதோ
மதிமுக முழுதுந் தண்துளி தரவே
வார்வேர் சோராதோ
கரமலர் அணைதந் தின்புறுமடவார்
காணா தேபோமோ
|