40 |
திருச்செந்தூர்ப்
பிள்ளைத்தமிழ் |
தந்தா வளந்தனக் குதவுதிரு மால்மருக
சப்பாணி கொட்டி
யருளே
தரளமெறி கரையில்வளை தவழ்செந்தில் வேலவா
சப்பாணி கொட்டி
யருளே.
(அ-ரை) கானவாரணம்-காட்டுக்கோழி.
முல்லை வேலி-முல்லைக் கொடியாகிய வேலி, பைணமருப்பு-பருத்த
கொம்புகள். முடைப்பால் அறா மேனி மடவார்-மொச்சை வீசும் பால்மணம் நீங்காத உடம்புடைய
இடைச்சியர். கொந்து - குலை, கொத்து ஓசித்தும்-ஒடித்தும். கழை-முங்கில் சுருதி தெரிய-இராகத்தின்
ஒலி வெளிப்பட. தேனு-பசுக்கள். கவுள்-கன்னம். தந்தாவளம்-யானை; கசேந்திரன்.
(34)
கார்கொண்ட பேரண்ட கூடமோ ரேழுநீ
கற்பிக்கு மந்த்ர
சாலை
கற்பதா ருவுநின் புயத்தினுக் கணிமாலை
கட்டவளர் நந்தன
வனஞ்
சீர்கொண்ட புருகூத னுந்தேவர் குழுவுநின்
திருநாம மறவா
தபேர்
சிகரகன காசலமும் உனதுதிரு வாபரண
சேர்வைசேர்
பேழை கடல்நீர்
போர்கொண்ட வேலின் புலால்கழுவு நீரேழு
பொழிலுமத்
தனைதீ வுமோர்
பொலிவினுட னேநின் கலாபமயில் வையாளி
போய்மீளும்
வீதியெனவே
|