42 |
திருச்செந்தூர்ப்
பிள்ளைத்தமிழ் |
(அ-ரை) மதவெற்பு-யானை. நிலையுலகு-நிற்றலையுடைய
பூமியிலுள்ளார். அணி முத்து-முதன்மையான முத்து. பப்பாதி-குதலைமொழி ஒவ்வொன்றிலும் பாதிபாதி.
குறுநகை யெழுப்பி-புன்சிரிப்புச் செய்து. பை-படம். உவளகம்-அகழி அளை-சேற்றின் குழி.
சருவிய-மாறுபட்ட
(36)
வேறு
கருதிய தமனிய மணியரை வடமிடு
கட்டுவ டத்தோடுங்
கழலிடு பரிபுரம் ஒலியெழ மணியுமிழ்
கைக்கட கப்பூணும்
இருசுட ரொளிபெற மருவிய தளர்நடை
யிட்டும திப்பாக
எழுமதி புரைதிரு முகமலர் குறுவெயர்
இட்டுவ ரத்தாமஞ்
சொருகிய நறுமலர் முகையவிழ் சிகையிடு
சுட்டிநு தற்றாழத்
தொழுதுளை வழிபடும் அடியவர் இளையவர்
சொற்படி தப்பமற்
குருமணி யலையெறி திருநக ரதிபதி
கொட்டுக சப்பாணி
குருபர சரவண பவசிவ மழவிடை
கொட்டுக சப்பாணி.
(அ-ரை) தமனியம்-பொன் கழல்-திருவடி:
தானியாகு பெயர். மருவிய - பொருந்திய. தளர்நடையிட்டு-தடுமாற்றமாக
|