பக்கம் எண் :

New Page 1

முத்தப்பருவம்

53

(அ-ரை) பை அரவு-படத்தையுடைய பாம்பு, ஆதிசேடன். குண்டகட்படு-குண்டு. அகழ்படு; ஆழமாகத்தோண்டுதல் பொருந்திய. சம்பராரி-மன்மதன் பிணித்த வல்வில்-கட்டிய வலிய வில்லாகிய கரும்பு. துகிரில்-பவளம் போன்ற வாயில். மேகாரம்-மயில்.                                            

(49)

இறுகல்கரு குதல்முரிவி லட்சுமி புடாயமுமுள்
ளேறல்புகை யேறல் செம்மண்
ஏறல்வெச் சந்திருகல் மத்தகக் குழிவன்றி
இரவியொளி யிற்க ரத்தல்

மறுவறு தகட்டிலோ ரத்திலுயர் தூக்கத்தின்
மன்னுமா தளைக விர்ப்பூ
மாந்தளிர் முயற்குருதி செவ்வரத் தங்கோப
மருவுமணி வகைய ளிப்பேர்

முறுகல்வளி யேறல் கல்லேறல்சிப் பிற்பற்று
முரிதல்திரு குதல்சி வப்பு
முருந்திற் குருத்துச் செருந்துருவி யிடையாடி
மூரிகுதை வடிவொ துங்கல்

துறுமுக் கக்கலொளி மட்கல்கர டென்னாத
துகிரில்விளை முத்தம் அருளே
தோகைமே காரவா கனசெந்தி லாயுனது
துகிரில்விளை முத்தம் அருளே.

(அ-ரை) இறுகல்-உள்ளொடுங்குதல். இப்பாடற்கண் மாணிக்கமணியின் குற்றங்களையெல்லாம் எடுத்துக்காட்டி, இதழின்நிறம் மாணிக்கம் போன்ற செந்திறத்ததாகலின், அதைப்பவளமாக்கி அப்பவளத்திண்கண் தோன்றிய முத்தந்தருதலை