54 |
திருச்செந்தூர்ப்
பிள்ளைத்தமிழ் |
‘துகிரில் விளை முத்தமருள்’ என இளங்கோல முருகப் பொருமானை விளித்துக்
கூறியவாறு
(50)
கோதிவரி வண்டுமது உண்டுகுடி
கொள்ளுமெங்
குழலுக் குடைந்து விண்ணிற்
குடிகொண்ட கொண்டற் குறுந்துளியின் நித்திலக்
கோவையொரு கால் விருப்பேம்
காதிலுறும் வள்ளிமக ரக்குழை கடக்குமெம்
கண்ணுக் குடைந்து தொல்லைக்
கயத்திற் குளித்தசேல் வெண்தரள மென்னிலொரு
காலமுங் கருதி நயவேம்
போதிலுறு பசுமடற் பாளைமென் பூகம்
பொருந்துமெங் கந்த ரத்தைப்
பொருவுறா வெள்வலம் புரியாரம் இன்புறேம்
பொற்றோள் தனக்கு டைந்த
சோதிவேய் முத்தந் தனைத்தொடேம் நின்னுடைய
துகிரில்விளை முத்தம் அருளே
தோகைமே காரவா கனசெந்தி லாயுனது
துகிரில்விளை முத்தம் அருளே.
(அ-ரை) குழலுக்குடைந்து-கூந்தலுக்குத்
தோற்று, கயம்-குளம். பூகம்-கமுகு. கந்தரம்-கழுத்து. நயவேம்-விரும்பேம். பொருஉறா-ஒப்பாகாத.
வேய்-மூங்கில். தோகை-மயில் வால்.
(51)
-----
|