72 |
திருச்செந்தூர்ப்
பிள்ளைத்தமிழ் |
ஈதலா லொருசிறிதும் இரவில்லை எவருக்கும்
இரவில்லை நீயும் இங்கே
ஏகினா லுனதுடன் கறைதுடைத் திடுதலாம்
என்பதற் கையமில்லை
ஆதலால் நீதிபுனை செந்தில்வடி வேலனுடன்
அம்புலீ ஆடவாவே
அருவரைகள் கிடுகிடென மயில்கடவு முருகனுடன்
அம்புலீ ஆடாவாவே.
(அ-ரை) காதலால்-விருப்பினால்,
சிறுமகார்-சிறுமக்கள். கருவாய் - கருப்பங் கொண்டு. முட்கண்டல்-முள்ளையுடையதாழை. ஈற்றுளைந்து
- கருவுயிர்த்து, சதகோடி-மிகப்பல. விண்ட-விரிந்த. கண்ணம்-பொடி. கானல் - கடற்கரைச்சோலை.
இரவு-யாசகம். இரவு-இராத்திரி. கறை-களங்கம். துடைத்திடுதல்-போக்குதல். மயில்கடவு - மயிலைச்
செலுத்தும்.
(70)
கடியவளி எறியுங் தழைச்சிறைக் கூருகிர்க்
கருடவா கனனும்இகல்கூர்
கட்டைமுள் அரைநாள் நெட்டிதழ் உடுத்தபொற்
கமலயோ ளியுமெழுந்து
கொடியவெங் கொலைபுரி வராகமென ஒருவனெழு
குவலயம் இடந்துதேடக்
குறித்தொருவன் எகினமாய் அண்டபகி ரண்டமுங்
கொழுதிக் குடைந்துதேட
முடியஇது காறுமவர் அறிவுறா வகைநின்ற
முழுமுதற் கடவுள் அடியும்
முடியுநீ கண்டனை எனக்கருதி இன்றுதிரு
முகமலர்ந் துனை அழைத்தால்
|