பக்கம் எண் :

New Page 1

74

திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்

(அ-ரை) மாகம்-விண்ணிடம். வருகை-வருகிறாய். பேசும் ஆகத்துள் - பேசுகின்ற நெஞ்சில். வேலையில்-கடலில் வேலை-வேற்படையை. குணவரை - கிழக்கிலுள்ள உதயகிரி. குணவரை-குணமுடையவரிடம். மறு-களங்கம். கரியமா முகில்-கருத்த பெரியமேகனம். மறையான்-மறைக்கப்படான்.          

(72) 

பரியநிழல் தன்னைச் சுளித்துவெயி லொடுபொருது
பாதசங் கிலியைநூறிப்
பாரிசா தத்தருவை இடுகுள கெனக்கவுட்
பகுவாய் புகக்குதட்டித்

தரியலர் நகர்ப்புறத் தெயிலிடு கபாடந்
தனைத்தூள் படுத்தியவர்பொன்
தருணமணி முடியிடறி முறைமுறை அழைக்குந்
தழைசெவிப் பிறைமருப்புச்

சொரியுமத தாரைக் குறுங்கட் பெருங்கொலைத்
துடியடிப் புரொருத்தல்
துங்கவேள் இவனுடைய முன்றிற் புறத்தில்
துளைக்கர நிமிர்த்துநிற்கும்

அரியகரு நாகமென வெருவல்கொல் இவனுடன்
அம்புலீ ஆடவாவே
அருவரைகள் கிடுகிடென மயில்கடவு முருகனுடன்
ஆம்புலீ ஆடவாவே.

(அ-ரை) பரிய-பெரிய. சுளியும்-கோபிக்கும். வெயிலொடு-வெயிலுடன். நூறி-கெடுத்து. குளகு-இலையுணவு. கவுள்-கன்னம். குதட்டி-அதுக்கிமென்று. தரியலர்-பகைவர் எயில்-மதில். கோட்டை, கபாடம்-கதவு. தூள்படுத்தி - துகளாக்கி. இடறி-எற்றி