78 |
திருச்செந்தூர்ப்
பிள்ளைத்தமிழ் |
கழிந்த நீங்கிய. வைகறை-விடியற்காலம் கலித்த-ஒலித்த. வால்வளை முழக்கும்
- வெள்ளைச் சங்கின் ஓசையும். பசுந்தேறல்-இனியதேன். சஞ்சரீகப்படலை. வண்டுக் கூட்டம். படிந்து
தோய்ந்து. வெங்கயம். கொடிய யானை. முடக்கும் - வளையும் புழைக்கரம்-தும்பிக்கை. பிளறி இரைந்து.
குண்டகழி-ஆழமான கடல்.
(76)
காவான பாரிசா தத்தருக் குலநிழற்
கடவுள் தெரு வீதிதோறுங்
கடிமணப் புதுமங் கலத்தொனி முழக்கமுகை
கட்டவிழ்த் திதழுடைக்கும்
பூவாரி லைத்தொடையல் அளகா புரேசன்
புரந்தொறுங் குளிறுமுரசம்
பொம்மென முழக்கமன் மதனுடைய பல்லியப்
பொங்குதெண் திரைமுழக்கப்
பாவாணர் மங்கலக் கவிவாழி பாடிப்
பரிந்துதிண் டிமமுழக்கப்
பரவரிய திருவிழா என்று பல பல்லியம்
பட்டினந் தொறுமுழக்கத்
தேவாதி தேவருயர் சதுமறை முழக்கநீ
சிறுபறை முழக்கியருளே
செருவிலெதிர் பொருதபர நிருதர்குல கலகனே
சிறுபறை முழக்கியருளே.
(அ-ரை) கா-பொழில். தருக்குலம்-மரக்கூட்டம்.
கடவுள்-இந்திரன் தொனி - ஒலி. கட்டு-முறுக்கு. உடைக்கும்-விரியும். பூ ஆர்-மலர் நிறைந்த. தொடையல்
- மாலை. அளகாபுரேசன்-அளகாபுரித் தலைவனான குபேரன், குளிரும்-ஒலிக்கும்; பொம்
|