பக்கம் எண் :

New Page 1

சிறுபறைப் பருவம்

77

(அ-ரை) முருந்து ஆரும்-மயிலின் இறகடியைப் போலும்-முறுவல்-பல். உடைந்து - தோற்று. முற்றயி-முதிர்ந்த, வெம் கருந்தாரை-கொடிய பெரிய கூர்மை. கட்கடை-கண்ணின் கடை. கடை-நுனி. பங்கப்பட-குறைவு அடைய, கருங்குழல்-கரியகூந்தல் முகில்-மேகம். அந்தரசாரி-ஆகாயத்தில்சஞ்சரிப்பது. பொருப்பு-மலை. திருந்தார்கள்-மனம் திருத்தம் பெறாத பகைவர்கள். நெஞ்சம் பெரும் பறை முழக்க - மனமானது பெரிதும் பறையடிப்பது போலத் துடிக்க.                

(75)   

 கங்கையணி யுஞ்சடையில் வைத்தகுழ விப்பிறைக்
கடவுளா லயமனைத்துங்
கங்குற் கருங்கடல் கழிந்தவை கறையிற்
கலித்தவால் வளைமுழக்கும்

பங்கய மலர்ப்பபொகுட் டிதழ்வாய் துளிக்கும்
பசுந்தேறல் உண்டுமெள்ளப்
பலகோடி சஞ்சரீ கப்படலை பெடையொடு
படிந்துபல கால்முழக்கும்

வெங்கய முடக்கும் புழைக்கர நிமிர்த்துவெளி
மேகநீ ரைக்குடித்து
வீதிவாய் நின்றுபிளி றித்தின முழக்கும்வெறி
வெண்திரைக் குண்டகழியிற்

செங்கயல் முழக்குந் திருச்செந்தில் வேலனே
சிறுபறை முழக்கியருளே
செருவிலெதிர் பொருதபர நிருதர்குல கலகனே
சிறுபறை முழக்கியருளே.

(அ-ரை) குழவிப்பிறை-இளஞ் சந்திரன். கடவுள் ஆலயம்-இறைவன் திருக்கோயில். கங்குற் கருங்கடல்-இரவாகியகரியகடல்.