பக்கம் எண் :

New Page 1

76

திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்

(அ-ரை) அரவக்கொடிக குருகுலப் பூபாலர் ஏறு பாம்புக் கொடியை உயர்த்திய கௌரவ மன்னர்கள் தலைவனாகிய துரியோதனன். வாகை-வெற்றி. பூபாலன்-பூமியைப் பாலனம் புரியும்  அரசன். துணைவர்-உடன்பிறந்தார். அக்குரோணி-சேனையில் ஒருதொகை. செரு-போர். பற்குனன்-அர்ச்சுனன் பட்டவர்த்தனர்-பட்டம் தரித்துத் தரித்த அரசர். விசையம்-வெற்றி. மண்எழும் - பூமிஏழையும். வலம்புரி-சங்கு திருமால் மருக. திருமாலுக்கு மருமகனே! பரநிருதர்- அன்னியரான அசுரர். சிறுபறை-சிறுகொட்டு.               

(74) 

முருந்தாரு மணிமுறுவல் நெய்தல்நில மகளிரிள
முகிழ்முலை தனக்குடைந்து
முளரிமுகை நீரிற் குளித்துநின் றொருதாளின்
முற்றிய தவம் புரியவெங்

கருந்தாரை நெட்டிலைப் புகர்வே லெனப்பொருங்
கட்கடைக் குள்ளுடைந்து
காவிமலர் பங்கப் படக்கருங் குழல்கண்டு
கரியமுகில் உடல்வெளுத்துப்

பொருந்தாமல் ஓடியந் தரசாரி யாயொரு
பொருப்பேற வளமையேறும்
புகழேற வாழுந் திருச்செந்தி லாயுனது
பொற்றாள் வணக்கமுற்றுத்

திருந்தார்கள் நெஞ்சம் பெரும்பறை முழக்கநீ
சிறுபறை முழக்கியருளே
செருவிலெதிர் பொருதபர நிருதர்குல கலகனே
சிறுபறை முழக்கியருளே.