பக்கம் எண் :

New Page 1

80

திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்

    முளைவாளை வடிவேலை வடுவைவெங் கடுவையிதழ்
முளரியைப் பிணையை மதவேள்
மோகவா ளியையடு சகோரத்தை வென்றுகுழை
முட்டிமீ ளுங்கண்மடவார்

நினைவாளை வாள்முறுவ லாடியிடிள முலையானை
நேர்நேர் நிறுத்திநெய்தல்
நீடுமன காடவி வனத்திற் பிணித்துவெண்
நித்தில வடந்தெரிந்து

சினைவாளை பாயுந் திருச்செந்தில் வேலனே
சிறுபறை முழக்கியருளே
செருவிலெதிர் பொருதபர நிருதர்குல கலகனே
சிறுபறை முழக்கியருளே.

(அ-ரை) முனை-கூர்மை. கடு-விடம். பிணை-மான். வாளி-அம்பு. அடுசகோரம்-கொல்கின்ற சக்கரவாகப் பறவை. குழைமுட்டி-காதைத்தாக்கி நினைவாளை-நினைவையுடையவளை. முலையானை-முலையாகிய யானைஅளக அடவி. கூந்தற்காடு-பிணிந்து-கட்டி. நித்திலவடம்-முத்துமாலை-நாள்-நல்ல நாளில். முடி-நாற்றுமுடி. விளம்பி. கூறி. நடுவாளை-நடுகின்றவளை. மென்போதில் உறைவானை-மெல்லிய மலரில் தங்கியிருப்பவளை, நாடி-விரும்பி. வினை போம்கழி-விளைகின்ற நீண்ட உப்பங்கழி. சினை-கருப்பம்.           

(79) 

அறந்தரு புரந்தரா தியருலகில் அரமகளிர்
ஆடுமணி யூசல்சிற்றில்
அம்மனை கழங்குபல செறியுந் தடஞ்சாரல்
அருவிபாய் பரங்கிரியுமுட்