புறந்தரு புனிற்றுவெள் வளைகடல் திரைதொறும்
பொருதசீ ரலைவாயுமென்
போதுகமழ் திருவாவி னன்குடியும் அரியமறை
புகலுமே ரகமுமினிமைக்
குறந்தரு கொடிச்சியர் பெருங்குரைவ முறைகுலவு
குன்றுதோ றாடலுந்தண்
கொண்மூ முழங்குவது கண்டின மெனக்கரட
குஞ்சரம் பிளிறுமரவம்
சிறந்தபழ முதிர்சோலை மலையும் புரந்தநீ
சிறுபறை முழக்கியருளே
செருவிலெதிர் பொருதபர நிருதர்குல கலகனே
சிறுபறை முழக்கியருளே.
(அ-ரை) அறம்தரு-தருமத்தைச் செய்கின்ற.
புரந்தராதியர்-இந்திரன் முதலியவர்கள். கழங்கு-கழற்சிக்காய். செறியும்-சேர்ந்திருக்கும்.
பரங்கிரி - திருப்பரங்குன்றம்.
புளிறு
-
இளமையையுடைய.
சீரலைவாய்
-
சிறந்த திருச்செந்தூர்.
கும்பகோணத் தருகிலுள்ள முருகன்படை வீடுகளுள் ஒன்று. குறம்தரு -
குறிசொல்கின்ற கொடிச்சியர்
-
குறத்தியர் குரவை
-
கைகோத்தாடுங் கூத்து.
குன்தோறு ஆடல்
-
மலைகளில் எல்லாம் தங்கியிருத்தல்.
கொண்மூ-மேகம். கரடகுஞ்சாரம் - மதயானை பிளிறும் அரவம்-ஒலிக்கும்
ஓசை. பழமுதிர் சோலைமலை - திருமாலிருஞ்சோலை மலையாகிய அழகர்மலை. புரந்த-காத்த.
திருதர் குலகலகனே
-
அவுணர்
குலத்தாருடன் கலகம்
செய்பவனே!
(80)
எழுமிரவி மட்கஒளி தருமணி யழுத்துமுடி
இமையவர் மகிழ்ச்சிபெறவே
இருகுழை பிடித்தவிழி அரமகளிர் சுற்றிநடம்
இதுவென நடித்துவரவே
|