94 |
திருச்செந்தூர்ப்
பிள்ளைத்தமிழ் |
வைத்தவெண் தயிருண்டு குடமுருட் டிப்பெருக
வாரிவெண் ணெயை யுருட்டிப்
பாராமல் உண்டுசெங் கனிவாய் துடைத்துப்
பருஞ்சகடு தன்னையன்று
பரிபுரத் தாளால் உருட்டிவிளை யாடுமொரு
பச்சைமால் மருக பத்தி
ஆராமை கூருமடி யவர்பழ வினைக்குறும்
பறவே உருட்டி மேலை
அண்டபகி ரண்டமும் அனைத்துலக முஞ்செல்லும்
ஆணையா ழியையு ருட்டிச்
சேராநி சாசரர் சிரக்குவ டுருட்டநீ
சிறுதேர் உருட்டி யருளே
சேவற் பதாகைக் குமாரகம் பீரனே
சிறுதேர் உருட்டி யருளே.
(அ-ரை) பொதுவியர்-இடைச்சியர்.
பொதுவர்: ஆண்பால். பெருக - மிகுதியாக. சகடு-வண்டி. (கஞ்சனால் ஏவப் பெற்று வந்த சகடாசூரன்
என்னும் வண்டி). பரிபுரம்-சிலம்பு. மருக-மருமகனே, ஆணையாழி-ஆக்ஞாசக்கரம். சிரக்குவடு-தலையாகிய
மலை.
(95)
கொந்தவிழ் தடஞ்சாரல் மலயமால் வரைநெடுங்
குடுமியில் வளர்ந்த தெய்வக்
கொழுந்தென்ற லங்கன்றும் ஆடகப் பசுநிறங்
கொண்டுவிளை யும்பருவரைச்
|