10.சிறுதேர்ப்பருவம்
தண்டே னுடைந்தொழுகு மருமாலை நீள்முடி
தரிக்குஞ் சதக்கிருதுசெந்
தருணமணி ஆசனத் தேறமா தலிசெழுந்
தமனியத் தேருருட்டப்
பண்டே பழம்பகை நிசாசரர்கள் உட்கப்
பரப்புநிலை கெட்டதென்று
பரவுங்கு பேரன்வட பூதரம் பொருபுட்
பகத்தேர் உருட்டவீறு
கொண்டே உதித்தசெங் கதிரா யிரக்கடவுள்
குண்டலந் திருவில்வீசக்
கோலப்ர பாமண் டலச்சுடர் துலக்கமுட்
கோலெடுத் தருண அருணன்
திண்டே ருருட்டவளர் செந்தில்வாழ் கந்தனே
சிறுதேர் உருட்டி யருளே
சேவற் பதாகைக் குமாரகம் பீரனே
சிறுதேர் உருட்டி யருளே.
(அ-ரை) மரு-மணம். சதக்கிருது-இந்திரன்:
நூறுமகம் இயற்றியவன். மாதலி- இந்திரன் தேர்பபாகன். உட்க-நடுங்க. புட்பகத்தேர்-புட்பகவிமானம்.
வில் - ஒளி. ப்பரபாமண்டலம்-ஆழகிய ஒளி வட்டமாகிய பரிவேடம். அருண அருணன் - சிவந்த சூரியன்
(94)
வாராரும் இளமுலை முடைத்துகிற் பொதுவியர்
மனைக்குட் புகுந்து மெல்ல
|