பக்கம் எண் :

New Page 1

92

திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்

(அ-ரை) பரிந்து கூவி-விரும்பிக்கூவி. முலைத்தாயர்-முலைப்பால்
கொடுக்கும் தாய். கோலம்-அழகு. எயிற்புறத்தில்-மதிற் பக்கத்தில். ஓச்சி-வீசி, எறிந்து. ஆவித்துணையே-உயிர் நண்பரே: விளி வேற்றுமை.            

(92) 

 பொய்யா வளமை தரும்பெருமைப்
பொருநைத் துறையில் நீராட்டிப்
பூட்டுங் கலன்கள் வகைவகையே
பூட்டி எடுத்து முலையூட்டி

மெய்யால் அணைத்து மறுகுதனில்
விட்டார் அவரை வெறாமலுனை
வெறுக்க வேறு கடனுமுண்டோ
விரும்பிய பாலைக் கொழித்தெடுத்துக்

கையால் இழைத்த சிற்றிலைநின்
காலால் அழிக்கை கடனலகாண்
காப்பாண் அழிக்கத் தொடங்கிலெங்கள்
கவலை எவரோ டினியுரைப்போம்

ஐயா உனது வழியடிமை
அடியேம் சிற்றில் அழியேலே
அலைமுத் தெறியுந் திருச்செந்தூர்
அரசே சிற்றில் அழியேலே.

(அ-ரை) பொருதை-தாம்பிரபர்ணி. துறை-பிரிவு - இறங்குமிடம். கலன் - ஆபரணம். பரலை-பருக்கலைக் கல்லை. இனி-இப்பொழுது.          

(93)