பக்கம் எண் :

றள

சிற்றிற்பருவம

91

  றளிப்பாய் அழிக்கை கடனலகாண்
அடியேஞ் சிற்றில் அழியேலே
அலைமுத் தெறியுந் திருச்செந்தூர்
அரசே சிற்றில் அழியேலே.

(அ-ரை) விளிப்பார்-அழைப்பார். விரகம்-ஆசை. அங்குரித்த-தோன்றிய. வேடப் பலிப்பை-வேடத்தின் வாய்ப்பை. திரைக்குண்டகழ்-கடல். தொகையில் - அளவற்ற. கடனல-முறைமையல்ல                          

(91) 

    கூவிப் பரிந்து மலைத்தாயர்
கூட்டி யெடுத்து முலையூட்டிக்
குடுமி திருத்தி மலர்சொருகிக்
கோலம் புனைந்து கொண்டாடிப்

பூவிற் பொலிந்த திருமேனிப்
புனிதா வண்டற் புறத்தெயிலில்
புகந்தால் இனியுன் னுடலேறப்
புழுதி இறைத்துப் போகாமல்

காவிக் குறுந்தோட் டிதழ்நெருக்குங்
கண்ணி தனைக்கொண் டோச்சிவனைக்
கானல் தரளத் தொடையாலுன்
கைத்தா மரையைக் கட்டிவிடோம்

ஆவித் துணையே வழியடிமை
அடியேம் சிற்றில் அழியேலே
அலைமுத் தெறியுந் திருச்செந்தூர்
அரசே சிற்றில் அழியேலே.