பக்கம் எண் :

கன

90

திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்

    கன்றும் அமணர் கழுவேறக்
காழிப்பதியில் வந்துதித்துக்
கள்ளப் பரச மயக்குறும்பர்
கலகம் ஒழித்துக் கட்டழித்தாய்

அன்று தொடுத்துன் வழியடிமை
அடியேம் சிற்றில் அழியேலே
அலைமுந் தெறியுந் திருச்செந்தூர்
அரசே சிற்றில் அழியேலே

(அ-ரை) துன்று-நெருங்கிய. மடு-பள்ளம். கடல்-தொல்லைப்பதி - பழம்பட்டினம். துய்த்த-நுகர்ந்த. வேதா-பிரமன். விதிப்படி-படைக்குந் தன்மை. கன்று-முனியும். காழி-சீகாழி. குறும்பர்-முரடர். அன்று தொடுத்து-அன்று முதல்                                                  

(90)

 களிப்பார் உன்னைக்கண் டவரவரே
கண்ணு மனமும் வேறாகிக்
கள்ளன் இவனை நம்முடைய
காதல் வலையிற் கட்டுமென

விளிப்பார் விரகம் அங்குரித்த
வேடப் பலிப்பைப் பாரென்று
மெள்ள நகைப்பார் இவருடனே
விளையா டாமல் வேறாகித்

துளிப்பார் திரைக்குண் டகழுடுத்த
தொல்லைப் பதியும் பகிரண்டத்
தொகையும் தொகையில் பல்லுயிருந்
தோற்றம் ஒடுக்கந் துணையாய்நின்