நெஞ்சு மகிழ வரவழைத்து
நிலவை வருவாய் எனப்புகன்று
நித்தல் உனது பணிவிடையின்
நிலைமை குலையேம் நீயறிவாய்
பிஞ்சு மதியின் ஒருமருப்புப்
பிறங்கும் இருதாட் கவுட்சுவடு
பிழியுங் கரட மும்மதத்துப்
பெருத்த நால்வாய்த் திருத்தமிகும்
அஞ்ச கரக்குஞ் சரத்துணையே
அடியேம் சிற்றில் அழியேலே
அலைமுத் தெறியுந் திருச்செந்தூர்
அரசே சிற்றில் அழியேலே.
(அ-ரை) தாலுரைத்து-தாலக்டி.
நிலவை-சந்திரனை. நித்தல்-தினந்தோறும். சூலையேம்-தவறமாட்டோம்.
சுவடு-அடையாளம். மதம்-செருக்கு. நால்வாய்-தொங்குகின்றவாய். நாலுதல்-தொங்குதல்.
அஞ்சுகரம்-ஐந்துகை. இப்பாட்டில் தாலாட்டு முதல் அம்புலிபருவம் வரை குறிப்புகள் காணப்படுகின்றன.
(89)
துன்று திரைக்குண் டகழ்மடுவில்
சூரன் ஒளிக்கப் பகைநிருதர்
தொல்லைப் பதியும் அவரிருந்து
துய்த்த வளமுந் தூளாக்கி
வென்று செருவிற் பொருதழித்தாய்
வேதா விதித்த விதிப்படியை
விலக்கி வெகுண்டு மீண்டளித்தாய்
வேண்டும் அடியார் வினையொழித்தாய்
|