பக்கம் எண் :

88

திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்

    புற்றில் அரவந் தனைப்புனைந்த
புனித ருடனே வீற்றிருக்கப்
பொலியுந் திகிரி வாளகிரிப்
பொருப்பை வளர்த்துச் சுவராக்கிச்

சுற்றில் வளர்ந்த வரையனைத்துஞ்
சுவர்க்கால் ஆக்கிச் சுடரிரவி
தோன்றி மறையுஞ் சுருப்பைவெளி
தொறுந்தோ ரணக்கால் எனநாட்டி

மற்றில் உவகை யெனுங்கனக
வரையைத் துளைத்து வழியாக்கி
மாக முகிலை விதானமென
வகுத்து மடவா ருடன்கூடிச்

சிற்றில் இழைத்த பெருமாட்டி
சிறுவா சிற்றில் சிதையேலே
திரைமுத் தெறியுந் திருச்செந்தூர்ச்
செல்வா சிற்றில் சிதையலே.

(அ-ரை) திகிரிவாளகிரி-சக்கரவாளமலை. வரை-மலை: மும்மடியாகுபெயர்.  தோரணம்-மாவிலை முதலிய வற்றால் தொங்க விடப்படும் சிறப்பலங்காரம். கனக வரை-மேருமலை.  மாகமுகில்-விண்ணிலுள்ள மேகத்தை.  விதானம்-மேற்கட்டி.  பெருமாட்டி-மாதேவி: பெருமான் என்பதன் பெண்பால்.             

(88) 

மிஞ்சுங் கனக மணித்தொட்டில்
மீதே இருத்தித் தாலுரைத்து
வேண்டும் படிசப் பாணிகொட்டி
விருப்பாய் முத்தந் தனைக்கேட்டு