பக்கம் எண் :

New Page 1

சிற்றிற்பருவம

87

(அ-ரை) தௌவும்-தத்தும். கரடம்-மதம். தந்திப் கடு-ஆண்யானை.
பிடிபட்டு-கையிலகப்பட்டு. இருநிதி-சங்கநிதி, பதுமநிதி. எவ்வம்-துன்பம். அயிராணி-இந்திராணி. பௌவம்-குமிழி. துயர்ஆழி-துன்பக்கடல். பழுவம் -  ஆழம். வேள்வி-யாகம் பழுது-குற்றம். தெவ்வர்-பகைவர்.
அடும்-கெடுக்கும்.        

(86) 

 ஆடுங் கொடித்தேர் எழுபுரவி
அருணன் நடத்தும் அகலிடத்தை
அடைவே படைத்தும் படைத்தபடி
அளித்துந் துடைத்தும் முத்தொழிலுங்

கூடும் பெருமை உனக்குளது
கூடார் புரத்தைக் குழாம்பறிக்கக்
கொள்ளுங் கருத்து நின்கருத்துக்
கொங்கை சுமந்து கொடிமருங்குல்

வாடுங் கலக விழிமடவார்
மலர்க்கை சிவப்ப மணற்கொழித்து
வண்டல் இழைத்த மனையழிக்கை
வன்போ சுரரும் மகவானும்

தேடுங் கமலத் திருத்தாளால்
சிறியேம் சிற்றில் சிதையேலே
திரைமுத்த தெறியுந் திருச்செந்தூர்ச்
செல்வா சிற்றில் சிதையேலே.

(அ-ரை) அருணன்-சூரியன் தேர்ப்பாகன்-அளித்து காத்து. கூடார் - பகைவர். கலகவிழி-போர் விளைக்கும் கண்கள். அழிக்கை-அழிப்பது. வன்போ - வலிமையோ? சிறியேம்-சிறியவர்களான எங்கள்.                

(87)