86 |
திருச்செந்தூர்ப்
பிள்ளைத்தமிழ் |
(அ-ரை) தையல்-அழகு. மடவார்-இளமையையுடையவர்.
தையல் மடவார்; மீமிசை மொழியுமாம் வண்டல்-மணல் விளையாட்டு. தரளம் உறுத்தி - முத்து அழுத்தி.
தடியாதோ. தடிப்படையாதோ; வீக்கம் கொள்ளாதோ, துய்ய - தூய்மையான. தவளம்-வெண்மை. தோயாதோ,
துய்ய-தூய்மையான. தவளம் - வெண்மை. தோயாதோ-படியாதோ. முதிரா-முற்றாத. முலையூட்டி-பாலுண்பித்து.
வதனம்-முகம். செறியாதோ-பொசுந்தாதோ
(85)
தௌவுங் கரட மடையுடைக்குந்
தந்திப் பகடு பிடிபட்டுந்
தருவும் அமுதும் இருநிதியுந்
தனியே கொள்ளை போகாமல்
எவ்வம் உறவிட் புலத்தமரர்
ஏக்கம் உறாமல் அயிராணி
இருமங் கலநாண் அழியாமல்
இமையோர் இறைஞ்சும் அரமகளிர்
பௌவம் எறியுந் துயராழிப்
பழுவத் தழுந்தி முழுகாமல்
பரக்குஞ் சுத்தித் துறைவேள்வி
பழுதா காமல் பரவரிய
தெவ்வர் புரத்தை அடுஞ்சிறுவா
சிறியேம் சிற்றில் சிதையேலே
திரைமுத் தெறியுந் திருச்செந்தூர்ச்
செல்வா சிற்றில் சிதையேலே.
|