சென்னி மணக்குஞ் சேவடியால்
சிறியேம் சிற்றில் சிதையேலே
திரைமுத் தெறியுந் திருச்செந்தூர்ச்
செல்வா சிற்றில் சிதையேலே.
(அ-ரை) பொன்னின்-பொன்போல,
பணிலம்-சங்கு. புறக்கோட்டகம் - பக்கத்தில். வளைந்த சிறுவீடு தூதைக்கலம்-சிறுமுட்டியாகிய பாத்திரம்
கன்னி - இளமை. பொகுட்டு-கொட்டை. உலைஏற்றி-உலைநீராக அமைத்து. கழை - கரும்பு, வல்சி-அரிசி.
பன்னி-பன்னீர். கறிதிருத்தி-கறியாகச் சமைத்து அடும் - சமைக்கும். அயிராவதப்பாகன்-ஐராவதத்தை
ஊர்ந்து செல்லும் இந்திரன். சென்னி - முடி. சிற்றில் சிதையேல்-சிறுவீட்டை அழிக்காதே.
(84)
தையல் மடவார் இழைத்தவண்டல்
தன்னை அழிக்கும் அதுக்கல்ல
தரளம் உறுத்தி உனது பொற்பூந்
தண்டைத் திருத்தாள் தடியாதோ
துய்ய தவளப் பிறைமுடிக்குஞ்
சோதி யெடுத்து முகத்தணைத்துத்
தோளில் இருத்தும் பொழுதுகணித்
தோளிற் புழுதி தோயாதோ
வையம் அனைத்தும் ஈன்றெடுத்தும்
வயது முதிரா மடப்பாவை
மடியில் இருத்தி முலையூட்டி
வதனைத் தணைக்கில் உன்கழற்காற்
செய்ய சிறுதூள் செறியாதோ
சிறியேம் சிற்றில் சிதையேலே
திரைமுத் தெறியுந் திருச்செந்தூர்ச்
செல்வா சிற்றில் சிதையேலே.
|