பக்கம் எண் :

84

திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்

சிகரபர வெற்பில்வரு முருககம ரக்கடவுள்
       சிறுபறை முழக்கியருளே
    திரறுமணி முத்தையலை யெறியுநக ருக்கதிப
        சிறுபறை முழக்கியருளே.

    (அ-ரை) சகரமகரச்சலதி-சகரபுத்திரரால் தோண்டப் பட்டுச் சாகரம் எனப்படும் மகர மீன்களையுடைய கடல். சருவிய-மருவிய. அகரஉகரம் - ஓங்காரம்; பிரணவம். அடியவர்-அடியைப்பற்றி அன்பர். பகர-சொல்ல. பரகதி - முத்தி, மேலானநிலை. பணிவிடை-ஏவல். சிகரம். முடி, உச்சி;
பரவெற்பு - பரங்குன்று.       

(83)

-----

9.சிற்றிற்பருவம

    பொன்னின் மணக்கும் புதுப்புனலிற்
        புடைசூழ் பணில முத்தெடுத்துப்
    புறக்கோட்ட டகமுண் டாக்கிவலம்
        புரியைக் தூதைக் கலமமைத்துக்

    கன்னி மணக்குங் கழனியிற்செங்
       கமலப் பொகுட்டு முகையுடைத்துக்
    கக்குஞ் செழுந்தேன் உலையேற்றிக்
        கழைநித் திலவல் சியைப்புகட்டிப்

    பன்னி மணக்கும் புதுப்பொழிலில்
        பலபூப் பறித்துக் கறிதிருத்திப்
    பரிந்து சிறுசோ றடுமருமை
       பாராய் அயிரா வதப்பாகன்