பவனனு மிகுத்தகடை யுகமுடி வெனப்பெருமை
பரவியடி யிற்பணியவே
படகநிபி டத்துழனி அசுரர்வெரு விக்கரிய
பரியவரை யிற்புகுதவே
சிவனருள் மதிக்கவரு முருககும ரக்கடவுள்
சிறுபறை முழக்கியருளே
திரளுமணி முத்தையலை யெறியுநக ருக்கதிப
சிறுபறை முழக்கியருளே
(அ-ரை) தவனன்-சூரியன்.
தருணம்-புதுமை. துமிதம்-துளி, அற்று அவிய - கெட்டொழிய. பொறி உரகன்-புள்ளியுடையபாம்பு
-புணரி-கடல். மொகுமொகு என-மொகுமொக என்றொலி எழ. பரவி-போற்றி புகழ்ந்து. படகம்.
இரணபேரி, நிபிடம்-நெருக்கம். துழனி-பேரொலி, பவனன்-காற்று.
(82)
சகரமக ரச்சலதி உலகுதனில் இப்பொழுது
சருவிய புறச்சமயநூல்
தலையழிய முத்திதரு சிவசமய முத்தர்பெறு
தவநெறி தழைத்துவரவே
அகரஉக ரத்தில்விளை பொருளடைவு பத்தியுறும்
அடியவர் தமக்கருளவே
அமரருல கத்தவரும் எவருமரு விப்பரவி
அடியிணை தனைப்பணியவே
பகரவு நினைத்திடவும் அரிதுனது சொற்பெருமை
பரகதி அளிக்குமெனவே
பலபல முனித்தலைவர் அனைவரும் உனக்கினிய
பணிவிடை தனைப்புரியவே
|