96 |
திருச்செந்தூர்ப்
பிள்ளைத்தமிழ் |
இருதிரையி
னிற்சந் தனக்கொடி மரத்தினை
இழுத்துவரும் எருமை ஏற்றை
எப்பொழுது
முதியகற் பகடாக உலகத்தில்
யாவருங் காண வென்று
திருவுள
மகிழ்ந்துதிரு விளையாடல் கண்டநீ
சிறுதேர் உருட்டி யருளே
சேவற்
பதாகைக் குமாரகம் பீரனே
சிறுதேர் உருட்டியருளே.
(அ-ரை) பிதற்றி-கூறி. பிறை மருப்புக் கரும்பகடு-பிறை போன்ற தந்தத்தையுடைய
யானை. முந்நீர்-கடல்; மூவகை நீரையுடையது என்றும், படைத்தல், காத்தல் அழித்தல் என்னும் மூன்று
தன்மையுடையது என்றும் கூறுவர். சந்தனக் கொடி மரம்-சந்தன மரத்தாலாகிய கொடி மரம்.
எருமையேற்றை - எருமைக்கடாவை.
(97)
ஆதிநூல் மரபாகி அதனுறும் பொருள்
ஆகி
அல்லவை யனைத்தும் ஆகி
அளவினுக் களவாகி அணுவினுக் கணுவாய்
அனைத்துயிரும் ஆகி அதனின்
சாதியின்
பிரிவாகி வெவ்வேறு சமயங்கள்
தானாகி நானா கிமெய்ச்
சாலோக சாமீப சாரூப சாயுச்ய
தன்னொளியி லீலை யாகி
ஓதிய
தனைத்தினும் அடங்காமல் வேறாகி
உள்ளும் புறம்பும் ஆகி
ஓளியிலொளி யாகிமற் றிரவுபக லற்றவிடம்
ஒப்புவித் தெனை யிருத்தித்
|