தீதினை அகற்றிநின் திருவருள் புரிந்தவா
சிறுதேர் உருட்டி யருளே
சேவற் பதாகைக் குமார கம்பீரனே
சிறதேர் உருட்டி யருளே.
(அ-ரை) மரபு-முறை. சமயம்-மதம்.
சாலோக! சாமீப, சாரூப, சாயுச்யமாகிய நால்வகை முத்திநிலைகள்.
(98)
வேறு
புலமை வித்தக மயூரவா கனவள்ளி
போகபூ டணசூரன்
சலமொழித்தவ நிசாசரர் குலாந்தக
சடாட்சர காங்கேய
குலவகொற்றவ குமாரகண் டீரவ
குருபர புரு கூதன்
உலக ளித்தவா செந்தில்வாழ் கந்தனே
உருட்டுக சிறுதேரே
உரக நாயகன் பஃறலை பொடிபட
உருட்டுக சிறுதேரே.
(அ-ரை) புலமை வித்தக-அறிவிற்
சிறந்தவனே! போக பூடண-போகத்தை ஆபரணமாகக் கொண்டவனே, சலம்-பகை. சடாட்சர-ஆறு எழுத்துக்குரியவனே.
(குமாராயநம.) காங்கேய-கங்கையின் மகனே! கண்டீரவ-சிங்கம் போன்றவனே! உரக நாயகன்-ஆதிசேடன்.
பஃறலை-பல்தலை; நிலை மொழிவரு மொழி மெய்கள்திரிந்தன.
(99)
|