பக்கம் எண் :

இரணிய வதைப் பரணி

81

பக

        பகிரண்டம் அதிரநகை பலவும் தோன்றப்,
            பவ்வத்தீ யொடுமுடுகி, “இவனது ஆகம்
        வகிர்கண்டு மடங்கலுடன் மலைப்பன்” என்னா
            மதலையெதிர் வாள்விதிர்த்த மறுக்கம் கண்டே,  
      

        (541)

‘பவ்வத்தீ’: கடலடியில் உள்ள தீ.

        பரியகுல வரைகள்நிலை குலையப் பாய்ந்து,
            பார்த்திடுகண் இமைப்பளவில் ஆர்த் தெழுந்தே,
        அரியுருவ மிடல்வெருவப் புகுந்து, தூணில்
            அடித்தகையும் அயில்வாளும் பிடித்துக் கொண்டே,     

(542)

        ஒருகை வலி யொடுதிருக, ஒருகைஅடு
            படைகவர, ஒருகைபிடி பட, ஒருகைபோய்
        இருகைதழு விட, அயலது ஒருகைஅவன்
            மணிமுடியில் இடிகள்விழுவ தென எறியவே,       

 (543)

        முடியில்இடி படும்அளவின், முருகுசினம்
            மிகமறுகி முடுகியே,
        வடவையனல் பொடியஎழு மடிஉரறி
            இரணியனும் மலையவே   
                   

(544)

        பொருகனகன் அவனும்மறை புகழ்கை யுறும்
            அரியும்எதிர் எதிர்பொருத பொலிவு,சலியா
        ஒரு கனக நெடுவரையும் உயர்கயிலை
            வடமலையும் உடன்மலையும் உவமை பெறவே,    

(545)

        அடிபொருத விசையில்எழு படிபெயர,
            உடல்விசையில் அருகுதிசை பெயர,ஒருகால்
        முடிபொருத விசையில்உடு குலநிரைகள்
            உதிர,மிசை முடியமுகில் முகடுஇடியவே,
              

(546)

        நகையில்எழு புகைநிமிர, நயனஎரி
            திசைகொளுவ, நடலையடல் அமரிடை விடாது,
        உகமுடிவில் வடஅனலும் உறுவளியும்
            என,உலகை ஒருநொடியில் வலம்வருவரே.          

     (547)

        அருவரையும் அலைகடலும் அகலிடமும்
            நிலைகுலைய, அவர்இருவர் அமர்பொருதபோது,
        இருவரையும் ஒருவன், ‘இவன் இறைவன் இவன்
            அசுரன்’என இமையவரும் அறிவரியரே.        

(548)