|
கலக
கலகமுடன் எதிர்பொருத கனகன்அக
வலிவெருவி நமனும்உடல்
குலைகுலைய,வேறு
உலகதலம் முழுதும்உயிர் அழுதலறி
அழிய,வரும் ஒருதிமில
குமிலம்இடவே,
(549)
முனையில்ஒரு வரைஒருவர்
முடுகிவிடு
கிலர் ‘உலகம் முடியும்இனி
முடியும்’எனவே
அனையசெரு விளைபொழுதில்,
அசுரர்பதி
கெடஅமளி அரவணையில் அரிதொடரவே,
(550)
அரிதொடர நிலைதளரும்
அசுரர்குல
பதி,புவனம் அதனில்ஒரு
புகலடிபொறாது,
எரிதொடரும் இரவிஎழு
புரவிபுகும்
அளவில்வட இமயமலை யிடைமறையவே,
(551)
அப்புறத்து மறைந்தவனை அகல்பகுவாய்
நரசிங்கம், அம்பொன்
குன்றின்
இப்புறத்து நின்றுபிடித்து, எரியனைய
சுரிகுஞ்சி பற்றி ஈர்த்தே,
(552)
தாளிரண்டும் பிடித்தெடுத்துத்
தலைஅண்ட
நெடுமுகடு குலையத் தாக்கத்
தோளிரண்டும் திசைநெருங்கச்
சுடர்இரண்டும்
உடன்சுழலச் சுற்றச்
சோர்ந்தே,
(553)
காதிரண்டும் கழன்றுவிழும்
கனமகர
குண்டலங்கள் காண இன்றும்
போதிரண்டும் எழுந்துவிடும்
பொருப்பிரண்டும்
கடந்த,இனிப் புகல்வ தென்னே!
(554)
‘போது இரண்டு’: சந்திர சூரியர். அவர் எழுந்து, விழும்
பொருப்புகள் உதயகிரி அத்தகிரி, அவற்றைக் கடந்து வீழ்ந்தன குண்டலங்கள்.
அன்றுஅவனை அரிசுழற்றச் சுழன்றுவிசை
மாறாமை யாதல் வேண்டும்
இன்றுவரை ஒருவரைசூழ்ந்து,
இருவர்திரிந்து
இளைப் பது,மற் றேது என்னே!
(555)
‘ஒரு வரை’: மேரு. இரணியனை அரி சுழற்றிய உந்துவிசையால்
இன்றும் சந்திர சூரியர் மேருமலையைச்சுற்றி இளைத்துப்போவது; சுற்றுவதற்கு வேறு ஏது ( காரணம் )
இலது. கம்பன் ‘அங்கு அது ( அயோத்தி நகரம் ) காண்பான் அமைப்பு அரும்காதல் அது பிடித்து உந்த,
அந்தரம், சந்திர ஆதித்தர் இமைப்பு இலர் திரிவர்; அது அலால் இதனுக்கு இயம்பல் ஆம் ஏது மற்று
யாதோ?’ என்பார்.
|