|
New Page 1
பொங்குஉருவின் அரிசுழற்றப்
பொருகனகன்
உடல்ஆழிப் பொருப்பில்
தோய்ந்த,
செங்குருதி நனைந்தஒளி, செக்கர்என
நினைந்துஉலகம் தெளியாது
என்னே!
(556)
‘ஆழிப் பொற்பு’: சக்ரவாள மலை, அண்டத்துக்கு அப்புறத்தது.
அம்மலை இரணியனுடைய செங்குருதியில் தோய்ந்தது. அத்தோய்வை நாம் காலையிலும் மாலையிலும் செக்கர்
ஒளி பரந்த வானமாகக் காண்கிறோம்.
அவ்வகைநின்று அரியுருவம் அகல்விசும்பில்
தடக்கை நிமிர்த்து, ஆயிரக்கால்
வெவ்வகைய திறல்அவுணன் விசைஅடங்கும்
படிசுழற்ற, விழுந்த
பின்னே,
(557)
வாய்வழிசெங் குருதியுக மலக்கி,அவன்
மதவலியை நினையுந் தோறும்,
தீஉமிழும் படிவிழித்துத் திசைகிழியும்
படிஅதிரச் சிரியா நின்றே,
(558)
கோயிலுடை நகரிடையில்
குஞ்சிபிடித்து
ஈர்த்துஅலரக் கொண்டு
போந்து,
வாயிலிடை நெடுங்கடையில் மணிப்படிமேல்
இருந்து,அவனை மடிமேல் இட்டே,
(559)
கொண்டவரம் அவையனைத்தும்
கொடுத்தநிலை
குலையாமல் குறித்து நோக்கிக்
கண்டகனை உயிர்பருகக்
கருதி,பரு
பருதியுகு காலம் பார்த்தே,
(560)
பருதி உகு: ஞாயிறு படும். கண்டகன்: முள் போன்ற இரணியன்.
செம்பொறியும் கரும்புகையும் சிதறிஉயிர்
நிலைபதறத் தீயோன் சிந்தை
ஐம்பொறியும் நிலைகலங்க
அடித்து, உடலம்
பேராமல் பிடித்து வைத்தே,
(561)
மேருகிரி துளைத்துஉருவி முளைத்துசில
வெண்பிறைபோல்
விளங்கும்வீரக்
கூர்உகிரின் நுதிகனகன் கொடியதிறல்
மிகுநெஞ்சம் குளிக்கவிட்டே,
(562)
குளித்தநகக் கொலைப்படையில்
கொதித்துஉடலைச் சிதைத்தே,
களித்தவனைச் செருக்கிடையக்
களத்திடையிற் கிழித்தே,
(563)
|