பக்கம் எண் :

கடை திறப்பு13


     (பொ-நி) முலைமேல்,  செவ்வாய்  வைத்த,  பவளவடம்  பனைவீர்
திறமின்; (எ-று.)

    
(வி-ம்.) வடம்-மாலை. முகிழ்-தாமரைமொட்டு. முயங்குதல்-புணர்தல்.
கொழுநர் - கணவர். மணி-அழகிய. வைத்த பவளம்-பதித்த பவளம் போன்ற
பற்குறி. வடம்-மாலை  போன்ற  ஒழுங்கு வரிசை, பவளமாலை போன்றது
கொழுநர் செய்தபற்குறி வரிசை என்க.                    (10)

குலோத்துங்கன்பால் கொண்ட மையல்கூறி விளித்தது

31. தண்கொடை மானதன் மார்புதோய்
     தாதகி மாலையின் மேல்விழும் 
கண்கொடு போம்வழி தேடுவீர்
   கனகநெ டுங்கடை திறமினோ.

    (பொ-நி) மானதன் தாதகி மாலையின் மேல் விழும் கண்கொடு வழி
தேடுவீர் திறமின்; (எ-று.)

    
(வி-ம்.) கொடை - கொடுத்தல். மானதன்- குலோத்துங்கன் தாதகி -
ஆத்தி. கொடு(இடைக்குறை)-கொண்டு. போம்வழி-தாம் போம்  வழி.  கண்
மாலைமீதே பதிந்து மயக்கத்தை விளைத்துவிட்டமையின், தாம்போம்  வழி
எதுவென்றும்  தேடவேண்டியதாயிற்றென்க. கனகம்-பொன். நெடுங்கடை-
நீண்ட வாசல்.                                              (11)

இதுவும் அது

32.அஞ்சியே கயல்கெடக் கூடலிற் பொருதுசென்று
     அணிகடைக் குழையிலே விழஅடர்த் தெறிதலால்
வஞ்சிமா னதன்விடும் படையினிற் கொடியகண்
   மடநலீர் இடுமணிக் கடைதிறந் திடுமினோ.
    
    (பொ-நி) கயல்கெட,  கடலிற்பொருது,  சென்று,  குழையிலே  விழ
அடர்த்து எறிதலால், வஞ்சிமானதன்  படையினிற்  கொடியகண்  மடநலீர் திறந்திடுமின்; (எ-று.)
 
    (வி-ம்.) கயல்-கெண்டைமீன்; மீனக்கொடி. கூடல்-இருகண் கூடுமிடம்;
மதுரை பொருது-மோதி; போர்செய்து. குழை-காதணி, காடு. விழ- கண்விழ;
பாண்டியர் விழ.