பக்கம் எண் :

134கலிங்கத்துப்பரணி

இட்ட திறை

334.ஆரம் இவைஇவை பொற்கலம்
      ஆனை இவைஇவை ஒட்டகம்
ஆடல் அயமிவை மற்றிவை
     ஆதி முடியொடு பெட்டகம்
ஈர முடையன நித்திலம்
     ஏறு நவமணி கட்டிய
ஏக வடமிவை மற்றிவை
     யாதும் விலையில்ப தக்கமே.

     (பொ-நி.)  இவைஆரம்;  இவை  பொற்கலம்;  இவைஆனை;  இவை ஒட்டகம்; இவை அயம்; இவை ஆதி முடியொடு, பெட்டகம், நித்திலம்; இவை ஏகவடம். இவை பதக்கம்; (எ-று.)

     (வி-ம்.) ஆரம் - மாலை. கலம் - அணிகள். ஆடல் -வலிமை. அயம்-
குதிரை. முடி-தலையணி. பெட்டகம்-பெட்டி. ஈரம்-குளிர்ச்சி. நித்திலம்-முத்து. ஏகவடம் - ஒற்றைச் சரமாலை. விலையாதும் இல் என இயைக்க.      (23)

இதுவும் அது

335.இவையும் இவையும்ம ணித்திரள்
      இனைய இவைகன கக்குவை
இருளும் வெயிலும்எ றித்திட
     இலகு மணிமக ரக்குழை
உவையும் உவையும்இ லக்கணம்
     உடைய பிடிஇவை உட்பக
டுயர்செய் கொடிஇவை மற்றிவை
     உரிமை அரிவையர் பட்டமே.

     (பொ-நி.)  இவையும்   இவையும்  மணித்திரள்;  இவைகனகக்குவை.
மகரக்குழை:  உவையும் உவையும் பிடி,  இவை பகடு; இவை கொடி;  இவை
பட்டம்; (எ-று.)