(பொ-நி.) மீனவர் ஐவரும் தண்டினின் கெட்ட கேட்டினை, நீ கேட்டிலை போலும்.: (எ-று.) (வி-ம்.) விட்ட-ஏவிய. தண்டு - சேனை. மீனவர் -பாண்டியர். ஐவர்- ஐந்துநாடமைத்து ஆண்டபாண்டி வேந்தர். கெட்டகேடு-அழிந்த அழிவு. (70) இதுவும் அது 382. | போரின் மேற்றண் டெடுக்கப் புறக்கிடும் | | சேரர் வார்த்தை செவிப்பட்ட தில்லையோ. |
(பொ-நி.) தண்டெடுக்கப் புறக்கிடும் சேரர் வார்த்தை செவிப்பட்டதில்லையோ? (எ-று.) (வி-ம்.) புறக்கிடல் - முதுகிடல். சேரர்வார்த்தை - சேரமன்னர்களின் செய்தி, செவிப்பட்டது - காதிற் கேட்டது. (71) இதுவும் அது 383. | வேலை கொண்டு விழிஞ மழித்ததும் | | சாலை கொண்டதுந் தண்டுகொண் டேயன்றோ. |
(பொ-நி.) விழிஞம் அழித்ததும், சாலை கொண்டதும் தண்டுகொண்டே அன்றோ? (எ-று.) (வி-ம்.) வேலை-கடல். சாலை-காந்தளூர்ச்சாலை. (72) இதுவும் அது 384. | மாறு பட்டெழு தண்டெழ வத்தவர் | | ஏறு பட்டது மிம்முறை யேயன்றோ. |
(பொ-நி.) தண்டு எழ, வத்தவர் ஏறு பட்டதும், இம்முறையே யன்றோ? (எ-று.) (வி-ம்.) மாறுபட்டு - பகைமைகொண்டு. தண்டு - (குலோத்துங்கன்) சேனை. வத்தவர் - வத்தவ நாட்டவர். ஏறு - அரசன்; வத்தவ நாட்டு மன்னனாகிய தாராவர்ஷன். இம்முறை-இவ்வாறு. (73) இதுவும் அது 385. | தளத்தொ டும்பொரு தண்டெழப் பண்டொர்நாள் | | அளத்தி பட்டத றிந்திலை யையநீ. |
|