பக்கம் எண் :

காளிக்குக்கூளி கூறியது153


     (பொ-நி.) தண்டு எழ, நீ அளத்தி: பட்டது அறிந்திலை; (எ-று.)

     (வி-ம்.) தளம் - அணிவகுப்பு. அளத்தி. ஓர் ஊர். பட்டது - அடைந்த
துன்பம்.                                                  (74)

இதுவும் அது

386.தண்ட நாயகர் காக்கும் நவிலையிற்
  கொண்ட தாயிரங் குஞ்சர மல்லவோ.

     (பொ-நி.) நவிலையில் கொண்டது ஆயிரம் குஞ்சரமல்லவோ? (எ-று.)

     (வி-ம்.) தண்டநாயகர்-படைத்தலைவர். நவிலை: ஓர் ஊர். காண்டது -
கைப்பற்றியது. குஞ்சரம்-யானை.                               (75)

இதுவும் அது

387.உழந்து தாமுடை மண்டலந் தண்டினால்
  இழந்த வேந்த ரெனையரென் றெண்ணுகேன்.

     (பொ-நி.)  மண்டலம் தண்டினால்  இழந்த வேந்தர் எனையர் என்று
எண்ணுகேன்; (எ-று.)

     (வி-ம்.)  தாம்  உழந்து  உடை  என  இயைக்க.  உழந்து - வருந்தி.
மண்தலம் - மண்ணுலகம். எனையர்-எத்துணையர். எண்ணுகேன்-கணக்கிட்டுச் சொல்வேன்.                                              (76)

இதுவும் அது

388.கண்டு காணுன் புயவலி நீயுமத
  தண்டு கொண்டவன் சக்கரம் வந்ததே.

     (பொ-நி.) தண்டுகொண்டு  சக்கரம்  வந்தது, நீயும்கண்டு உன் புயவலி
காண்; (எ-று.)

     (வி-ம்.) கண்டு  போர்  செய்து  கண்டு.  தண்டுகொண்டு-படைகளைத்
திரட்டிக்கொண்டு. சக்கரம்-திருமாலின் சக்கரம் போன்ற கருணாகரன்.
                                                         (77)

இதுவும் அது

389.இன்று சீறினும் நாளையச் சேனைமுன்
 நின்ற போழ்தினில் என்னை நினைத்தியால்.