பக்கம் எண் :

196கலிங்கத்துப்பரணி

யானைநிரை கடலணை போன்றமை

494. புவிபுரந் தருள்செயும் சயதரன் ஒருமுறைப்
      புணரிமெல் அணைபடப் பொருவில்வில் குனிதலின்
கவிகுலம் கடலிடைச் சொரிபெருங் கிரியெனக்
     கரிகளின் பிணம்இதிற் காண்மினோ காண்மினோ.

     (பொ-நி.)  ஒருமுறை   சயதரன்   வில்    குனிதலின்,   கவிகுலம்
கடலிடைச்சொரி,  பெருங்கிரி  என, இதில்  கரிகளின்  பிணம்  காண்மின் !
(எ-று.)

     (வி-ம்.)  புவி - உலகு.  புரந்து - காத்து:  வினையெச்சம்.  சயதரன்
-குலோத்துங்கன் (ஆகிய திருமால்)  ஒரு  முறை இராமனாய்ப் பிறந்தகாலை.
புணரி -கடல். பட-உண்டாக. பொருவு இல் - ஒப்பற்ற. குனிதல் - வளைதல்.
இராமன் வில்வளைத்துக் கணைதொடுத்த பின்பே வருணன்  பணிந்தமையின்
இங்ஙனம் கூறப்பட்டது, கவி-குரங்கு, கிரி-மலை, கரி-யானை.
                                                           (23)

வில் திறன் கண்டு வியந்த வீரர் நிலை

495.உற்றவாய் அம்புதம் பரிசையும் கருவியும்
      உருவிமார் பகலமும் உருவிவீழ் செருநர்வில்
கற்றவா ஒருவன்வில் கற்றவா என்றுதம்
     கைம்மறித் தவரையும் காண்மினோ காண்மினோ.

     (பொ-நி.)  அம்பு,  உருவி  உருவி,  வீழ்  செருநர், "ஒருவன் வில்
கற்றவா, வில்கற்றவா" என்று, தம் கை மறித்தவரையும்  காண்மின் ! (எ-று.)

     (வி-ம்.) உற்ற-அடைந்த.  வாய்-தம்உடலிடம்.  அம்பு-எதிரி விடுத்த
அம்பு.   பரிசை - கேடகம்.   கருவி - கவசம்.   செருநர்-வீரர்.  ஒருவன்:
கருணாகரன்.    கைமறித்தவரையும்     (இவன்     வீரர்களால்  எதிர்க்க
இயலாதவனென     அவன்     பெருமையை      வியந்து)     கையை
யசைத்தவர்களையும்.                                         (24)

கண்விழித்துக் கிடக்கும் வீரர் நிலை

496.விண்ணின்மொய்த் தெழுவிமா னங்களிற் சுரர்களாய்
      மீதுபோ முயிர்களே யன்றியே இன்றுதம்
கண்ணிமைப் பொழியவே முகமலர்ந் துடல்களும்
     கடவுளோர் போலுமா காண்மினோ காண்மினோ.