நோயும் மருந்துமாந்தன்மை கூறி விளித்தது 55. | தங்குகண் வேல்செய்த புண்களைத் | | தடமுலை வேதுகொண் டொற்றியும் செங்கனி வாய்மருந் தூட்டுவீர் செம்பொன் நெடுங்கடை திறமினோ. | (பொ-நி.) கண்வேல் செய்த புண்களை, வேதுகொண்டொற்றியும், வாய்மருந் தூட்டுவீர் திறமின்; (எ-று.)
(வி-ம்.)கண்வேல் - ( தம்) கண்ணாகிய வேல். வேது - நோய்க்குச் சூடான பொருள்களால் வேது கொடுத்தல் இயல்பாம். ஒற்றுதல் - ஒற்றடங் கொடுத்தல். தங்கு - படிந்த; சேர்ந்த. வெப்பம் ஊட்டுதல். இதனை 'கொம்மை வரி முலை வெம்மைவேதுறீஇ' என்றார் இளங்கோவடிகளும். வாய்மருந்து - அதரபானம். புண்ணுக்கு வேதும் மருந்தும் ஈண்டுக் கூறப்பட்டன. (35) இதுவும் அது 56. | பொருங்கண் வேலிளைஞர் மார்பி னூடுருவு | | புண்கள் தீரஇரு கொங்கையின் கருங்கண் வேதுபட ஒற்றி மென்கைகொடு கட்டு மாதர்கடை திறமினோ. | (பொ-நி) கண்வேல் மார்பினூடு உருவு புண்கள் தீர வேதுபட ஒற்றி, கைகொடு கட்டு மாதர் திறமின்; (எ-று.) (வி-ம்.) பொரும்-தாக்குகின்ற. கண்வேல்-(தங்கள்)கண்ணாகிய வேல். இளைஞர் - ஆடவர். மார்பின் ஊடுருவு புண்கள் - மனத்தே புகுந்த காமத்தீயைக் குறித்தன. கண்-முலைக்கண். வேதுபட - நோய்க்கு வேது கொடுப்பதுபோல் இருக்க. கட்டும் - நோய்க்குக் கட்டுக் கட்டுதல் போல் இறுகத் தழுவும். புண்ணுக்கு வேது கொடுத்தலும் கட்டுக்கட்டுதலும் ஈண்டுக் கூறப்பட்டன. (36) கூந்தலியல்பு கூறி விளித்தது 57. | இடையி னிலையரி திறுமிறு மெனஎழா | | எமது புகலிடம் இனிஇலை யெனவிழா அடைய மதுகரம் எழுவது விழுவதாம் அளக வனிதையர் அணிகடை திறமினோ. | |