பக்கம் எண் :

பாயிரம்3


திருமால் வணக்கம்

3. ஒருவயிற்றிற் பிறவாது
     பிறந்தருளி உலகொடுக்கும் 
திருவயிற்றிற்று ஒருகுழவி
   திருநாமம் பரவுதுமே.
4. அந்நெடுமால் உதரம்போல்
     அருளபயன் தனிக்கவிகை
இந்நெடுமா நிலமனைத்தும்
   
பொதிந்தினிது வாழ்கவென்றே.

    (பொ-நி)   கவிகை   பொதிந்து  வாழ்க  என்று,  உலகு  ஒடுக்கும்
வயிற்றிற்று குழவி நாமம் பரவுதும்; (எ-று.)

    (வி-ம்.) ஒடுக்குதல்-அடைத்தல், வயிற்றிற்று-வயிற்றையுடையது. குழவி -
குழந்தை.  கண்ணன் - திருமால்.  நாமம்-பெயர். பரவுதும்- வணங்குவோம்.
நெடுமால் - நீண்ட  திருமால்.  உதரம் -வயிறு. கவிகை-குடை. பொதிந்து-
தன்னுள் அடக்கி. உதரம் அடக்கியதுபோல் கவிகை  அடக்கி வாழ்க என்க.
அபயன்  உலக  முழுவதும்  காப்பது  குறிக்கப்பட்டது.            (3, 4)

நான்முகன் வணக்கம்

5.உகநான்கும்  பொருள்நான்கும்
     உபநிடதம்  ஒருநான்கும்
முகநான்கும்  படைத்துடைய
   
முதல்வனையாம் பரவுதுமே.
  
6.நிலநான்கும் திசைநான்கும்
     நெடுங்கடல்கள் ஒருநான்கும்
குலநான்கும் காத்தளிக்கும்
   
குலதீபன் வாழ்கவென்றே.

    (பொ-நி)  குலநான்கும்  அளிக்கும்  குலதீ்பன் வாழ்க என்று,  முகம்
நான்கும் உடைய முதல்வனைப் பரவுதும். (எ-று.)