பக்கம் எண் :

4கலிங்கத்துப்பரணி

     (வி-ம்.)  உகம்-யுகம்; ஊழிக்காலம்.  பொருள் நான்கு-அறம், பொருள்,
இன்பம்,  வீடு.  உபநிடதம்  நான்கு - இருக்கு,  யசுர், சாமம், அதர்வணம்.
முதல்வன் - பிரமன்.  நிலநான்கு - குறிஞ்சி,  முல்லை,  மருதம், நெய்தல்.
அளித்தல் - அருள்  செய்தல்.  குலதீபன் - குலோத்துங்கன். குலஞ்சிறந்து
விளங்க  நின்றமையின்  குலதீபன்  என்றார்.  ஈண்டும்  ஆட்சிப் பரப்புக்
குறிக்கப்பட்டது.                                            (6, 7)

ஞாயிற்று வணக்கம்

7.பேராழி உலகனைத்தும் பிறங்கவளர் இருள் நீங்க
 ஓராழி தனைநடத்தும் ஒண்சுடரைப் பரவுதுமே.

 
8.பனியாழி உலகனைத்தும் பரந்தகலி யிருள்நீங்கத்
 தனியாழி தனைநடத்தும் சயதுங்கன் வாழ்கவென்றே.

     (பொ-நி.) இருள் நீங்க, ஆழி நடத்தும் சயதுங்கன்  வாழ்க  என்று,
இருள்நீங்க  ஓராழிதனை நடத்தும் சுடரைப் பரவுதும். (எ-று.)

     (வி-ம்.) ஆழி-கடல், பிறங்க-விளங்க.  ஓராழி-ஒற்றைச் சக்கரத் தேர்.
சுடர்- ஞாயிறு. பனி - குளிர்ச்சி. ஆழி -கடல். பரந்த-பரவிய. கலி-துன்பம்,
ஆழி - ஆணைச்சக்கரம்.  சயதுங்கன்- குலோத்துங்கன். ஈண்டும் ஆட்சிப்
பரப்புக் குறிக்கப்பட்டது.                                    (7. 8)
 

யானைமுகன் வணக்கம்

9.காரணகா ரியங்களின்கட் டறுப்போர் யோகக்
     கருத்தென்னுந் தனித்தறியிற் கட்டக் கட்டுண்டு 
ஆரணமா நாற்கூடத் தணைந்து நிற்கும்
   ஐங்கரத்தது ஒருகளிற்றுக்கு அன்பு செய்வாம்.

 
10.தனித்தனியே திசையானைத் தறிக ளாகச்
     சயத்தம்பம் பலநாட்டி ஒருகூ டத்தே
அனைத்துலகுங் கவித்ததெனக் கவித்து நிற்கும்
   அருட்கவிகைக் கலிப்பகைஞன் வாழ்கவென்றே.