14. | எண்மடங்கு புகழ்மடந்தை நல்லன் எங்கோன் | | யானவன்பால் இருப்பதுநன் றென்பாள்போல மண்மடந்தை தன்சீர்த்தி வெள்ளை சாத்தி மகிழ்ந்தபிரான் வளவர்பிரான் வாழ்க வென்றே. | (பொ-நி.)புகழ்மடந்தை "நல்லன்; இருப்பது நன்று" என்பாள்போல, மண்மடந்தை, வெள்ளைசாத்தி மகிழ்ந்தபிரான் வாழ்க என்று, பூமாதும் சயமாதும் புயத்திருப்ப, உயரத்திருப்பளென்று, நாவகத்துள் இருப்பாளை, நவிலுவோம்; (எ-று.)
(வி-ம்.) நான்முகன் நாவினும் புலவர் நாவினும் உறைதலாற் கலைமகள் நாமகளெனப்பட்டாள். பூமாது-மண்மகள். சயமாது -வெற்றிமகள். என்று இருப்பாளை, என்ன இருப்பாளை எனத் தனித்தனி இயைக்க. சென்னி-குலோத்துங்கன், நவிலுவோம்-துதிப்போம். எண்மடங்கு-மற்றை யரசர்களினும் எட்டு மடங்கு. மண்மடந்தைக்குச் சாத்தினான் என்க. மண்மடந்தை - நிலமாகிய மகள். சீர்த்தி-மிகுபுகழ். வெள்ளை-வெள்ளை நிறத் தூய ஆடை; ஈண்டு ஆகுபெயர். ஈண்டும் அபயன் புகழ் மேம்பாடு குறிக்கப்பட்டது.(13, 14)உமை வணக்கம் 15. | செய்யதிரு மேனியொரு பாதிகரி தாகத் | | தெய்வமுதல் நாயகனை எய்தசிலை மாரன் கையின்மலர் பாதமலர் மீதும்அணு காநம் கன்னிதன் மலர்க்கழல்கள்சென்னிமிசை வைப்பாம். | 16. | கறுத்தசெழி யன்கழல்சி வப்பவரை யேறக் | | கார்முகம்வ ளைத்துஉதியர் கோமகன்முடிக்கண் பொறுத்தமலர் பாதமலர் மீதணிய நல்கும் பூழியர்பி ரான்அபயன் வாழ்கஇனி தென்றே. |
(பொ-நி.) செழியன் வரை ஏற வளைத்து, உதியர் கோமகன் மலர் பாதமலர் மீதணிய நல்கும் அபயன் வாழ்க என்று, கரிதாக எய்த சிலைமாரன் மலர் அணுகா கன்னிதன் கழல்கள் சென்னி மிசை வைப்பாம்; (எ-று.)
(வி-ம்.) செய்ய-சிவந்த. கரிதாக எய்த மாரன் என்க. தெய்வமுதல் நாயகன்-சிவன். மாரன்-மன்மதன். மாரன்கை; ஆறன்தொகை. கன்னி -உமை. கறுத்த-சினந்து பகைத்த. செழியன்- |