பக்கம் எண் :

8கலிங்கத்துப்பரணி

20.தலமுதல் உளமனு வளர்கவே
     சயதரன் உயர்புலி வளர்கவே 
நிலவுமிழ் கவிகையும் வளர்கவே
   நிதிபொழி கவிகையும் வளர்கவே.

 
     (பொ-நி.)மனுவளர்க; புலி வளர்க;  கவிகையும் வளர்க; (அதனால்)
மறையவர்  தொழில்  விளைக;  மழை பொழிக;   வளம்  நிறைக;  உயிர்
நிலைபெறுக (எ-று)

    (வி-ம்.) மறையவர்  தொழில் - வேள்வி. முகில் - மேகம். நிதிதரு -
செல்வத்தைத்  தரும்.  நிலைபெறுக - நிலைபெற்று  வாழ்க.  தலம் முதல்
உள - உலக  நிலைபேற்றிற்குக்  காரணமாக உள்ள. மனு-குலோத்துங்கன்.
சயதரன் - குலோத்துங்கன், புலி-புலிக்கொடி. நிலவு-நிலாவொளி.  கவிகை-
வெண்கொற்றக்குடை. நிதி-செல்வம். கவிகை-கீழ்நோக்கி  இடக் கவிந்தகை.
                                                      (19, 20)

2. கடை திறப்பு.

     [கலிங்கப்   போர்    மேற்சென்ற   வீரர்   மீண்டும்வரக்   காலந்
தாழ்த்தாராகவும், அதுகண்ட மகளிர் ஊடிக் கதவடைத்தாராகவும் கொண்டு,
புலவர்   தாம்   பாடப்புகும்   அக்கலிங்கப்போர்ச்   சிறப்பைக்  கேட்டு
மகிழுமாறும்  அதன்பொருட்டுக்  கதவைத்  திறக்குமாறும்  வேண்டுவதாக
அமைத்துப்  பாடப்பட்டது  இப் பகுதி.  ஈண்டுப்  புலவர்  அம்மகளிரின்
தன்மைகளை  அழகுற   எடுத்துக்  கூறி  அவர்களை  விளிக்கும்  திறம்
பெரிதும்   நயஞ்சிறந்து   காணப்படுகின்றது.   மகளிரின்  தன்மைகளைக்
கூறுங்கால்,  அவர்தம்  உறுப்பு  நலங்களை உவமைகொண்டு விளக்கியும்,
நடைபயில்    இயல்பை    நயம்   பெறக்கூறியும்,   குலோத்துங்கன்பால
காதல்நிலை  கூறியும்,  ஊடிய நிலையினைக் நயம்பெற இயம்பியும், கலவிப்
போரினைக்கவின்  பெறக்  கூறியும்,  உலாப்போந்த  குலோத்துங்கன்பால்
உருகி  நின்ற  நிலையினைக்  கூறியும், சென்றவர் வரவு பார்த்தவண்ணம்
கூறியும், சிறைப்பிடித்த மகளிரின் சீர் எடுத்து இயம்பியும்,  காதல் விளைய
நின்ற   நிலை   கூறியும்,   துயில்   ஒழித்தெழுந்த  தோற்றம்  கூறியும்
நகக்குறிகண்டு மகிழ்ந்தமை கூறியும், உறுப்பு நலத்தால் வாட்டுதல் கூறியும்,
கண்   விருந்து   செய்யும் காட்சிநிலை  கூறியும்,  மனங்கவர்  இயல்பை
நயம்பெற  மொழிந்தும்  கூடல்சுழித்து  வருந்தியது  கூறியும்,  நோயும் மருந்துமாம் இயல்பினை உரைத்தும்,