களப்போர் சொலப்புகும் தந்நிலை உரைத்தும், கணவர் பிழை காணாக் காதலியல் கூறியும், உறவாடும் இயல்பினை உளங்கொள உரைத்தும், கலவியின் மயக்க நிலையினைக் கூறியும், பிரிவுறு துயர்நிலை நயம்பெற இயம்பியும், கணவரால் கலிங்கம் அழித்தது மொழிந்தும் செல்வது பயில்வார்க்குக் கழிபேரின்பம் பயந்து நிற்கின்றது.]உறுப்புநலங் கூறி விளித்தது 21. | சூதளவு அளவெனும் இளமுலைத் | | துடியளவு அளவெனும் நுண்ணிடைக் காதளவு அளவெனும் மதர்விழிக் கடலமு தனையவர் திறமினோ. |
(பொ-நி) இளமுலை, நுண்ணிடை, மதர்விழி (உடைய) அமுதனையவர் திறமின்; (எ-று.) (வி-ம்.) சூது-சூதாடு கருவி. துடி- உடுக்கை. இடை-இடுப்பு. காதை அளாவும் அளவு எனும் மதர்விழி என்க. கடல் அமுது-திருப்பாற்கடலில் தோன்றிய அமிழ்தம். இதனை 'அலையிடைப் பிறவா அமிழ்து' என இளங்கோவடிகள் பாராட்டுதல் அறிக. மதர்-செருக்கு. விழி-கண். முலை, இடை, விழிச் சிறப்புக்கூறியவாறு. விழி காதுவரை நீண்டிருப்பது நல்லிலக்கணம். "காதளவோடிய கலகபாதகக் கண்" என்றார் ்பட்டினத்தடிகளும். முலை நலங் கூறி விளித்தது 22. | புடைபட இளமுலை வளர்தொறும் | | பொறைஅறி வுடையரும் நிலைதளர்ந்து இடைபடு வதுபட அருளுவீர் இடுகதவு உயர்கடை திறமினோ. | (பொ-நி) முலைவளர்தொறும், அறிவுடையரும் நிலைதளர்ந்து, இடைபடுவதுபட அருளுவீர் திறமின், (எ-று.)
(வி-ம்.)புடைபட-பக்கம் திரண்டு. பொறை-துன்பம் பொறுத்தல், நிலை தளர்ந்து - தன் இயற்கைத் தன்மை குன்றி. இடை - இடுப்பு. இடைபடுவது - துவள்வது; துன்புறுவது. பட-பொருந்த. உயர்கடை இடு கதவு என இயைக்க. இடு கதவு-தாழிட்ட கதவு. கடை-வாயில். கண்டாரை வருத்தும் இயல்பு கூறப்பட்டது. (2) |