புறன
120 |
திருக்கருவைப்
பதிற்றுப்பத்தந்தாதி |
இறவானென்பதை உணர்ந்து
தமது திருமுகத் திருகோட்டில் வலக்கோட்டை ஒடித்து வீசு அதனால் அவ்வசுரனைக் கொன்றனர்.
சிந்துரன் என்னும்
அசுரனை அழித்தற்பொருட்டுக் கருவுருக் கொண்டிருக்கை யில் அவ்வசுரனால் சிரங் கொய்யப்பட்டு ஆவணி
மாதச் சதுர்த்தியில் சிரமின்றித் திருவவதாரஞ்செய்து பின்னர்க் கயாசுரன் சிரத்தைக்கொண்டு
திருவுரு முற்றுப் பெற்றதாகக் கூறும் விநாயகபுராணம்.
‘கசானனர் திருவவதாரப்படலம்’ காண்க. வேறு பிற புராணங்கள் பல, வேறு பலவாறாகக் கூறுவதுமுண்டு.
பிரணவ சொரூபம் விளக்கவந்த திருவுருவென்று கோடலே சாலும்.
நூல்
செய்யுள்-2.
‘ சீறுடரவம் முடித்த சடை ’ என்றதாற் பெறக்கிடக்கும் வரலாறு : தாருகாவனத்து முனிவர்கள்
சிவபெருமானை மறந்து மீமாஞ்சை நூலை உண்மை எனக் கொண்டு இறுமாந்திருந்தனர். அவர்கள் இறுமாப்பை
அடக்கி உள்ள நிலையைச் சோதித்துத் தமது திருவடிக் காட்படுத்தத் திருவுளங்கொண்ட
சிவபெருமான்,
‘திருவடியின் மிதியடியும்,
திகழுடைவெண் கோவணமேல்
மருவரையும், புரிநூலும்,
வலஞ்சுழிஉந் தியும்,மார்பும்,
ஒருவரையும், இருவரையும்
புரையாத உயர்தோளும்,
பரவருநற் பொக்கணமும்,
தமருகமும், பலிக்கலனும்,
‘சீராரும் திருமிடறும்,
செங்கனிவாய்ப் புன்சிரிப்பும்,
ஏராரும் வார்காதும்,
இலகுவிழித் தொழில் நயப்பும்,
வேராரும் திருநுதற்கீழ்
விருப்புருவத் திருப்புருவம்
தாராநிற் கும்கமலத்
தனிமலர்போல் திருமுகமும்,
‘பொட்டுமலி திருநுதலும்,
புரிந்துமுரிந் திசைந்தசைந்த
மட்டுமலி கருங்குழலும்,
வளர்பவள ஒளிமழுங்க
விட்டுவிளங் கியஎழிலார்
மேனியுமாய் மெல்லியலார்
பட்டுவிழும் படியில்விழும்
படியழகின் படிவமென’
(கோயிற்புராணம்)
|