புறன
திருக்கருவைப்
பதிற்றுப்பத்தந்தாதி |
121 |
பிக்ஷாடனத் திருக்கோலம்
கொண்டு, திருமாலைப் ‘ புகல்வரிதாம் பொலிவினதாய், அற்புதமாய்ச் சிவந்துநிமிர்ந் தகன்றவயில்
விழிக் கணைகள், விற்புருவத்துடன் ’ கூடிய மோகினி உருக்கொள்ளச் செய்து, மோகினி உருவாய அத்
திருமாலும் தாமுமாய்த் தாருகாவனத்து முனிவர் பன்னசாலைகளிற்சென்று பிச்சை இரந்தனர். அப்போழ்து
அம் முனிவர்கள் மோகினியின் பேரழகில் மயங்கியும் அவர்கள் மனைவியர் சிவபெருமானது பேரழகில்
மயங்கியும் தம் நிறையும் கற்பும் முறையே இழந்து உள்ளநிலை குலைந்தனர். அன்றியும் அம் முனிவர்கள்
தம் மனைவியர் கற்பிழக்கக்காரணமான காபாலி என்பதுபற்றிச் சிவபெருமான்மீது சீற்றங்கொண்டு
அவரைப் பலவாறு சபித்தனர். அச் சாபங்களெல்லாம் இறைவனை அணுக மாட்டாமல் கெட்டொழிந்தன.
அதுகண்டும் அம் முனிவர்கள் உண்மை உணராமல் முன்னையினும் சீற்றம் மிகுந்து இக் காபாலியை எம்
யக்ஞபலத்தால் அழிப்பம் என எழுந்து சிவபெருமான் திருமுன்னர் ஓமகுண்டம் அமைத்து ‘ நஞ்சான திரவியங்கள்
பல கொண்டு நெஞ்சாலும் நினைவரிய நிருமலனே இலக்காக ’ அபிசார வேள்வி ஒன்று செய்தனர்.
உடனே அவ்வோமகுண்டத்தினின்று புலி ஒன்று கர்ச்சித்து எழுந்தது. முனிவர்கள் அதனைச்
சிவபெருமான்பால் ஏவினர். சிவபெருமான் சிரித்தருளித் தம்மை நோக்கிவந்த அப் புலியைப்
பிடித்துத் தமது திருக்கரத்தின் நுனி நகத்தால் அதன் தோலைக் கிழித்துப் பசும்பட்டாக அரையில்
உடுத்தருளினார். அதன்மேல் ஓமகுண்டத்தினின்று பூதங்கள் எழுந்தன. முனிவர்கள் அவற்றினை ஏவ
அவை சிவபெருமானுக்கு அடிமைகளாகி அவரைச் சூழ்ந்து சேவித்து நின்றன. பின்னர் மானும் மழுவும் நாகங்களும்
ஓமகுண்டத்தினின்று உண்டாயின. முனிவர்கள் ஏவலால் வந்த அவைகளில் மானை இடக்கையிலும் மழுவை
வலக்கையிலும் நாகங்களைச் சிரத்திலும் உரத்திலும் கரத்திலும் ஆபரணங்களாக அணிந்தருளினார்
சிவபெருமான். அப்பால் முயலகன் என்னும் அசுரன் குறள் வடிவினனாய் ஓமகுண்டத்தினின்று தோன்றி
வந்தனன். சிவபெருமான் அவ்வசுரனைக் கீழேதள்ளி முதுகுநெரியத் தமது வலத்திருவடியால் மிதித்து
ஏறி
|