புறன
122 |
திருக்கருவைப்
பதிற்றுப்பத்தந்தாதி |
நின்றார்.
முனிவர்கள் யாவும் பயனற்றமைகண்டு மந்திரங்களை ஏவினர். அவற்றைச் சிவபெருமான் தமது
திருப்பாதச் சிலம்புகளாகத் தரித்தருளிச் சடைதாழச் சிலம்பொலிப்ப அம் முனிவர்களுக் கெதிரே
நாற்கரமும் நுதல்விழியும் கறைக்கண்டமும் தோன்ற, கணங்கள் துணங்கைக் கூத்தாட, அரிய
திருநடனம் செய்யத் தொடங்கினார். அக்கினியையும் இழந்து மந்திரங்களையும் இழந்த அம்
முனிவர்கள் அந் நடன வேகத்தைத் தாங்கலாற்றாது வீழ்ந்தனர். மோகினி உருக்கொண்ட
திருமாலும் நடுங்கினர். சிவபெருமான் நாக கங்கணம் அணிந்த திருக்கரத்தால் அஞ்சல்
என்று அவரை அமைத்தருளினார். அவ்வளவில் பார்வதி தேவியார் இடப வாகனத்தோடு ஆண்டு
எழுந்தருளிவந்து சிவபெருமானது இடப் பாகத்திலே பொருந்தினர். சிவபெருமான் மகிழ்ந்து
அம்மையார்மீது திருக்கடைக் கண் சாத்தியருளினார். அப்பொழுது தேவர்கள் மலர்மழை
பொழிந்தனர்; பிரமாதிய ரனைவரும் சிவபெருமான் திருமுன்வந்து நிலந்தோயப் பணிந்தனர்.
திருமாலும் தமது பெண்வடிவொழித்து முன்னை யுருப்பெற்றுப் பிரமாதியரோடு சென்று சிவபெருமானை
நமஸ்கரித்து நின்றனர். சிவபெருமான், பார்வதிதேவி யாரும் தேவர்களுங் காண ஒப்பரிய
திருக்கூத்துகள் ஆடிப் பின்னர் தேவர்களை நோக்கி, ‘ எமது இன்பக் கூத்தைச்
சிவலிங்கத்தினிடமாகத் தியானித்து உய்யுங்கள்’ என்று திருவாய்மலர்ந்தருளிப்
பார்வதிதேவியாரோடு ஆகாயத்தில் மறைந்தருளினார். இவ்வாறு கோயிற் புராணம்
கூறிற்று.
இவ் வரலாறு வேதத்தில் விதிக்கப்பட்ட யாகாதி கர்மங்கள் ஒழிந்து சிவ வழிபாடு சிறக்கத்
தொடங்கிய சரித உண்மையைக் குறிக்க எழுந்த தென்பது அறிஞர் சிலர் கருத்து.
மீமாஞ்சையாவது உலகம் முதலீறற்ற உள்பொருள் எனவும், ஆன்மாக்களின் வேறாக ஆண்டவன் ஒருவன்
இல்லை எனவும், சிவன் முதலிய சத்தங்களே பிரமம் எனவும், வேதம் விதித்த கருமங்களே இருமைப்
பயன்களையும் பயக்கும் எனவும் கூறுவது. இது செய்தார்
சைமினி முனிவர்.
செய்யுள்-4. ‘
பொதுவில் நடித்தோன் ’ என்றதாற் பெறக்
|