பக்கம் எண் :

புறன

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

123

கிடக்கும் வரலாறு : மத்தியந்தின முனிவர், சிவபெருமான் திருவருளால் தமக்குப் பிறந்த அருமை மகனார்க்கு நாமகரண முதலாகிய சடங்குகள் அனைத்தையும் முறைப்படி செய்துமுடித்து ஸ்ரீபஞ்சாட்சர மந்திரத்தையும் உபதேசித்து ‘ குழந்தாய், இனியாம் உனக்குச் செய்யவேண்டுவ தென்ன ? ’ என்று வினாவியருளினார்.  அப்பொழுது குமாரர், தந்தையார் திருவடிகளை வணங்கி, வேதாகமங்களிற் கூறப்பட்ட தவவகைகளுட் சிறந்தது யாதென்று அறிவிக்குமாறு வேண்டினர். சிவார்ச்சனையே சிறந்ததென்று அருளினர் தந்தையார்.  தனயர் அதனை ஏற்றுக்    கொண்டு, ‘சிவபெருமான் திருவுளங்கொண்டு எழுந்தருளியிருக்கும் திருத்தலம் யாது?  அதனையும் அடியேற்குத் தெரிவித்தருளல் வேண்டும்’ என்று இரந்தனர்.  அதற்குத் தந்தையார் அருளிச்செய்வார்: ‘உலகமெல்லாம் சிவசன்னிதியேயாம். அப்படிக் காணாமை தவக்குறை என்பதறிவாயாக.  ஆயினும், பசுவின் மடிமுழுதும் நிறைந்திருக்கும் பாலமுதம் முலைக்காம்பில் வெளிப்பட்டுத் தோன்றுமாறுபோல வும், உடலெங்கும் வியாபித்த ஆன்மா உள்ளக்கமலத்தைச் சிறப்பிடமாகக் கொண்டாற்போலவும், இறைவன் எங்கும் நிறைந்திருப்பினும் சிறப்பாகக் கொண்டிருக்கும் இடமும் ஒன்று உண்டு.  அஃதாவது, தில்லை மூலத்தானமே’ என்றுகூறி அதற்கான காரணத்தையும் விளக்கியருளினார்.  புதல்வர், அவர் உரைத்தவற்றைக் கேட்டுக்கொண்டு, அவரையும் அன்னையாரையும் அடிவணங்கி விடை பெற்றுத் தில்லை நாடிச் சென்றார்.  சென்ற பாலமுனிவர் தில்லைவனத்தின் மேற்புறம் உற்று, ஆங்கொரு மரநிழலில் சிவலிங்கம் ஸ்தாபித்து நாடோறும் அதை அருச்சித்து வழிபடுவாராயினர். அப்பொழுது, அருச்சனைக்காகும் பூக்களைக் குற்றமற ஆய்ந்து கொய்வது அரிதாக, அதற்காக வருந்திச் சிவபெருமானை வேண்டி, அவரால் புலிநகங்களுடைய கால்களும் கைகளும் பெற்றதன்றி ஒவ்வொரு நகத்தினும் ஒவ்வொரு கண்ணும் அமையப்பெற்றார்.  அதனால் அவர் வியாக்கிரபாதமுனிவர் எனவும் புலிக்கால்முனிவர் எனவும் பெயர்பெற்றனர்.  இங்ஙனம் பூக்களைக் குற்றமற ஆய்ந்து கொய்தற்கு ஏற்ற அவயவங்களைப்பெற்ற முனிவர் சிவார்ச்சனை