கார்மேகக்
கவிஞர் இயற்றிய
கொங்கு
மண்டல சதக மூலமும் உரையும்
பாயிரம்
காப்பு
அறுசீரடியாசிரிய
விருத்தம்
1.
|
பூமலி
செம்ம னத்தார் புரிவினைக் கிடர கற்றி
நாமலி தீம னத்தார் நசைவினைக் கிடரி யற்றிக்
கோமலி யுருவ முன்று கூறிருதிணைபொ ருந்தித்
தேமலி மருப்பொன்றேந்து தேவனைப் பணிகு வேமால்
|
(கருத்துரை)
நல்ல மனமுடையார் தொடங்கிய செயல்களுக்கு நேரும்
இடையூறுகளை நீக்கியும், அச்சமான கொடிய உள்ளத்தினர் ஆசை
கொள்ளுந் தொழில்களுக்குத் தடையுண்டாக்கியும், மேன்மையுள்ள
(பூதக்கால் - தெய்வ உடல் - யானைத்தலை) மூவகை வடிவில்
(அஃறிணை - உயிர்திணை) இருதிணை பொருந்தி ஒற்றைக் கொம்பராக
விளங்கும் மூத்த பிள்ளையாரை வணங்குவாம் என்பதாம்.
மேற்கோள்
என்னரே யாயினும்
யாவதொன் றெண்ணுதல்
முன்னரே யுனதுதாண் முடியுறப் பணிவரேல்
அன்னர்தஞ் சிந்தைபோ லாக்குதி யலதுனை
யுன்னலார் செய்கையை யூறுசெய் திடுதிநீ
(கந்தப்புராணம்)
|
|