பக்கம் எண் :

2

மணிகொண்ட கோடொரு மருங்குண்மை யாற்பெண்மை
     வடிவென்று மஃதின்மையோர்
மருங்குண்மை யாலாண்மை வடிவென்று மீதுகீழ்
     மாறிய திருக்காட்சியால்
அணிகெண்ட உயிர்திணைய தென்று மஃறிணை யென்றும்
     யார்க்குங் கிளக்கவரிதாம்
ஐங்கரச் சிந்துரத் தின்கழற் செஞ்சரண
     மஞ்சலித்துத் துதிப்பாம்..................

                          (அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்)


பாச மங்குசஞ் தேசுறு மெயிறொண்
கனியிவை தாங்கும் புனித நாற்கரத்
தங்கதங் கடகம் பொங்கிழை யார
நிறைமணிச் சுடிகைக் கறையணற் கட்செவி
கொண்ட திண்பெரும் பண்டிக் குறுந்தாட்
களிறுத னிருகழல் கருதா
வெளிறுறு துயரம் வீட்டினம் பெரிதே

                          (சங்கற்ப நிராகரணம்)

                  அவையடக்கம்

2.
கடல்சூழ் புவியிற் கண்டமற்றுங் காணுஞ் சுவரிற் கீறிமகிழ்
மடமார் சிறுவர் போற்கொங்கு வளமுஞ் சீருமோராதேன்
திடமாய் வினவி நோக்கியிசை தெளிவோர் முன்னிம்                                     மண்டலத்தின்
அடைவாங் கதைகள் பொதிசதக மாக்கிலறிஞ ரிகழாரே,

     (க-ரை) சமுத்திரம் வளைந்த விரிந்த பூமியிலுள்ள, கண்டங்கள்
தீவுகள் முதலிய பிரிவுகளை, நிற்குஞ் சுவரில் கோடிட்டு எழுதிக் களிக்கின்ற
அறியாச் சிறுவர்களைப் போலக் கொங்கு மண்டலத்தின் வளமும் சிறப்பும்
அறியாதவனாகிய எளியேன் (அவற்றை) நன்றாகக்கேட்டுப் பார்த்துச்
சொல்லவல்லார்முன் அக்கொங்கு மண்டலத்தின் முறையான கதைகளடங்கிய
சதகம் என்னும் பிரபந்தத்தை இயற்றுவேனேல் (அதைத்) தவறு என்று
விவேகிகள் இகழமாட்டார்கள் என்பதாம்.

                     (மேற்)

அறையு மாடரங் கும்மடப் பிள்ளைகள்
தறையிற் கீறிடிற் றச்சருங் காய்வரோ

                            (கம்பராமாயணம்)