(க-ரை)
திரிபுவனச் சக்கரவர்த்திகள் என்னுஞ் சோழ வேந்தன்.
மேற்கொண்டுள்ள போரில் சேனாபதியாகப் படையைச் செலுத்தி வெற்றி
கொண்டு திரும்பினமையால் மும்முடிப் பல்லவன் என்ற பட்டத்தைப்
பெற்றவன் வாழ்கின்ற சிங்கை (காங்கேய) நகரமுங் கொங்குமண்டலம்
என்பதாம்.
வரலாறு
:- சோழர்களில் மூன்றாம் ராஜராஜன் என்பவன்
திரிபுவன சக்கிரவர்த்தி யென்ற விருது நாமத்துடன் கி.பி. 1216ம் வருஷம்
பட்டத்துக்கு வந்தான். அக்காலத்துப் பலவானாகப் பல்லவ வமிசத்தான்
"அவனி ஆளப்பிறந்தான் கோப்பெருஞ்சிங்கன்" என்பான் இவனுடன்
எதிர்த்து வெற்றியுறத் தொடங்கினான் சீரங்கத்துக்கு வடக்கே 10 மயிலில்
கண்ணனூர் என்பதை இருப்பிடமாகக் கொண்டு காவிரி வடகரைப்
பகுதிகளை ஆண்டுவந்த (இந்த ராஜராஜ சோழனது மாமன்) போஜன வீர
நரசிம்மதேவன் என்பவன் கொங்கு நாட்டுப் படைகளையுந் திரட்டிச்
சென்று கோப்பெருஞ் சிங்கன் தேசத்தை அழித்து வருக எனச் சேனா
வீரர்களுக்குக் கட்டளையிட்டான். சேனா வீரர்கள் மேற் கண்ட பல்லவ
ராஜ்ஜியத்தை நாசமாக்கித் திரும்பினர் என்பதைத் திருவயிந்திர புரத்துத்
தெய்வநாயகப் பெருமாள் கோயில் பிராகாரத்து மேலைச் சுவரில்
எழுதியிருக்குஞ் சிலாசாசனத்தாற் றெரிகிறது. அந்தச்சேனா நாயகர்களில்
லிங்கயன் என்பவன் சென்று வெற்றி கொண்டதால் "மும்முடிப்
பல்லவராயன்" எனும் விருதுபட்டம் பெற்ற (சிங்கை) காங்கேயத்தை உறை
இடமாகக் கொண்டான். இப்பொழுது காங்கேயம் மும்முடிப்பல்லவராயன்
பட்டத்தை வகித்துவரக் கூடியவர் கொங்கு வேளாளர்களில் செங்கண்ண
குலத்தலைவர். அவர்களுடைய விருதுபாட்டுகள் மேற்கண்ட சரிதையை
விளக்குகிறது.
(மேற்)
போரிட்ட
பல்லவன் றேசத்தை வெட்டியே
பொன்மகுடம்
நீ படைத்தாய்
செங்கதிர்ப் பரிதிகுல மகராஜ ராஜனாந்
திரிபுவன
சக்கிர வர்த்தி
சித்தமகிழ் தளகர்த்தர் லிங்கயப் பல்லவன் |
என்பது முதலியவற்றால்
நன்கு தெரிகிறது.
பல்லவராயன்
சிறுவன்
73.
|
சங்கிராம
சோழன் மரகத முத்தொடு தங்கிரதஞ்
சிங்கையிற் பல்லவன் செல்வனுக் கீயச் சிறுவன்மனம்
புங்கம தாகச் சிறுதே ருருட்டிப் புலவனுக்கு
மங்கள மேவிக் கொடுத்தவன் னான்கொங்கு மண்டலமே. |
|