பக்கம் எண் :

102

     (க-ரை) மணிபதித்த சிறுவண்டியைச் சங்கிராம சோழன் என்பவன்,
அன்புகொண்டு சிங்கை (காங்கேயம்) மும்முடிப் பல்லவராயனது சிறுவனுக்கு
கொடுத்தனன். அதனை உருட்டி விளையாடுஞ் சிறுவனிடம் ஒரு புலவன்
சென்று கேட்கக் கொடுத்த குழந்தையுங் கொங்குமண்டலம் என்பதாம்.

     வரலாறு :- மும்முடிப்பல்லவ ராயன் என்று பட்டம் உள்ளவரின்
குழந்தைக்குச் சங்கிராம சோழன் என்பவன் விளையாடு வண்டி ஒன்று
மகிழ்ச்சியோடு கொடுத்தனன். அச்சிறுவன் அவ்வண்டியை இழுத்து
விளையாடிக் கொண்டிருந்தான். ஒரு புலவன் குழந்தையின் முகவசீகரத்தைக்
கண்டு மகிழ்ந்து ஐயா, தங்கள் அரியதந்தை இப்பொழுது இருந்திரப்பரேல்
மிகுந்த பரிசு பெற்றுச் செல்வேன். புலவர்கள் குறித்து வந்த இடத்துப்
பரிசுபெறாது திரும்பிச் செல்லுதல் நன்றல்லவே என்றனன். குழந்தை
இவ்வார்த்தையைக் கேட்டு, தான் விளையாடும் பொன் வண்டியை இரு
கையாலும் எடுத்துக் கொடுத்து வைத்துக் கொள்ளுங்கள் என்று நிரம்பா
மொழியாற் சொல்லிற்று. குழந்தையின் தாராள குணத்தை வியந்த புலவர்
இதனைப் பெற்றுக் கொண்டு போகச் சம்மதி கொள்ளவில்லை.
இக்கருத்தறிந்த குழந்தையின் அன்னையார் அறிந்துதன் குழந்தையின்
உதாரத்துக்கு மனமுவப்புற்றனர் என்றும், தந்தை வந்து இந்நிகழ்ச்சியை
யறிந்து பெருமகிழ்ச்சிபூத்து, குழந்தை கொடுத்த சன்மானமே அன்றித்தான்
சில பொன் ஆடை கொடுத்தனுப்பினர் எனவும் அமராவதிப் பல்லவராயன்
குறவஞ்சி கூறுகிறது.

                   முதலிக்காமிண்டன்

74.



புதுமைப் படைவேட் டுவர்சூழத் தாரா புரத்துடனே
சதுர மிகுபடை யாற்சம ராற்றிச் சயம்பெறவே
முதலிக்கா மிண்ட னெனக்கிருஷ்ண ராயர் மொழிவிருதை
மதிகொள் பருத்திப் பளிச்செல்ல னுங் கொங்கு மண்டலமே.

     (க-ரை) தாராபுரத்து எதிர்த்த பகைவரை, வேட்டுவப் படையையும்
சேர்த்துக் கொண்டு போய்த் துரத்தி வென்ற திறமையைக் கண்டு, விஜய
நகர கிருஷ்ணராயர், முதலிக் காமிண்டன் என விருதுப் பெயர் கொடுக்கப்
பெற்ற பருத்திப்பள்ளிச் செல்லனுங் கொங்கு மண்டலம் என்பதாம்.