பக்கம் எண் :

103

     பருத்திப் பள்ளியிற் செல்ல குலத்துதித்து வலிமிகுத்தோனான ஒரு
வாலிபனிருந்தான். தாராபுரம் (தென்கரை) நாட்டிற் சில பகைவர்கள் மிகுந்த
தொந்தரவு செய்து கொண்டிருந்தார்கள். இவ் வாலிபன் சேனா வீரனாகப்
பல கொங்குப் படைகளைச் சேர்த்து அச்சேனைத் தலைவனாகி இராஜ
கட்டளைப்படி அங்குச் சென்று பகைவர்களை வெருட்டி ஒட்டினன்.
இவ்வலிமையை நன்கு மதித்து "முதலிக்காமிண்டன்" என்று விருதுப் பெயர்
விஜய நகரம் கிருஷ்ணராயரவர்களாற் கொடுக்கப்பட்டது.

     பருத்திப்பள்ளி புவனேசுவ சுவாமி ஆலயத்து இச்சாசனஞ்
செதுக்கப்பட்டுள்ளது.

     பருத்திப்பள்ளி என்பது கீழ்கரை பூந்துறை நாட்டைச் சேர்ந்த
உபநாடுகளுள் ஒன்று. எழுகரை நாட்டுளொன்றுமாம், சித்திரமேழி
விண்ணகரம் எனப் பழைய பெயர் இவ்வூருக்கிருத் திருக்கிறது.

                  (மேற்)

வெற்றியுடனே கிருஷ்ணராயரிடத்தில் வர
     மேன்மைப் பட்டாபிஷேக முடிசூட்டி
முத்தின் சிவிகையில் வைத்து வலஞ்செய்துதான்
     முதலிக் காமிண்ட னென்றும் விருதுங்கொடுத்து
நத்தூர் பருத்திப் பள்ளி நாடும் பூந்துறை நாடு
     நாலாறுநாடுதானு மேலுமையாப் பெற்றோன்

                              (இருப்புலிப்பள்ளு)

     விஜய நகரங் கிருஷ்ணதேவராயர் கி.பி. 1509- முதல் 1530- வரை
அரசாண்டனர். (அசவுதல முதலிக் காமிண்டன்)

             காடையூர்க் காங்கேயன்

75.



காடையிற் சேடக் குலத்தான் மகள்மெய்க் கழுவறைந்து
மேடையிற் சங்கப் பலகையுண் டாக்கிநல்- வேப்பமலர்த்
தோடையும் பாடகக் காங்கேயன் றன்னைச் சுமந்து பெற்று
மாடையு நேர்தெய்வப் பேறுபெற் றாள்கொங்கு மண்டலமே.