பக்கம் எண் :

110

முமிருக்கின்றன. உயர்த்தப்பட்டதும் இரண்டு
இரட்டைத்தூண்களுடையதுமான நடுவரை மேடையின் மேலிருக்கிறது.
நரசிம்ம சுவாமியின் உருவம் உட்கார்ந்த நிலையிலிருக்கிறது. சுவாமியின்
பீடத்திற்குச் சரியான மட்டத்திற்கு வலது புறத்தி லொருவருக்குப்
பின்ஒருவராக, உருத்திரன், சூரியன், சனகனும், இடதுபுறத்தில் சனந்தனன்,
சந்திரன், பிரமாவு மிருக்கிறார்கள். இதில் சூரியனும் சந்திரனும் சாமரம்
போடுகிறார்கள். சனகனுஞ் சனந்தனனும், உலகத்தில் நடக்குங்
காரியங்களைத் தெரிவிக்கிறார்கள். உருத்திரனும் பிரமனும் இரணியனது
வதத்தின் போதுண்டான கோபத்தைத் தணிக்கிறார்கள்.

     இரண்டாவதறையில் இரணியனைத் துடையிற் கொண்டு இரண்டு
கைகளாலவன் வயற்றைப் பீறுவதும், இரண்டு கரங்களால் அவன்
கைகால்களைப் பிடித்துக் கொண்டிருப்பதும் மற்றுமிரண்டு கரங்களில்
சங்கு, சக்கரமும், வேறிரண்டு கைகளில் வாளும் வில்லுங் கொண்டிருப்பது
போலுங் காணப்படுகிறது. மூன்றாவது அறையில் வராக அவதாரம்,
வராகத்தின் தலைக்கு மேலே நான்கு வேதங்களாலாகிய நான்கு
தலைகளிருக்கின்றன. அடியிலொரு புறம் ஆதிசேஷனும் மறுபுறம் பூமி
தேவியும் கலியுகத்தின் முடிவில் வரப்போகிற பாதங்களைக் காணக்
காத்திருக்கிறார்கள். வடக்கு, தெற்கு இவ்விரண்டு சுவர்களிலும் இரண்டு
மாடங்களிருக்கின்றன. தெற்கே இருப்பது வாமனாவதாரம். நடுவிலிருப்பது
திருவிக்கிரமன். கீழேகுடை பிடித்துக் கொண்டிருப்பது வாமனாவதாரம்.
மேலே தூக்கியுள்ள பாதத்தைப் பிரமன் பூசை செய்வது போலவும்,
அதற்குப் பக்கத்தில் திருவிக்கிரமனது வெற்றிக்காக ஜாம்பவந்தன் பேரிகை
யடிப்பது போலவும் காட்டப்பட்டிருக்கிறது. கீழே மகாபலி
தானங்கொடுப்பதற்குச் செம்பில் தண்ணீரோடு நிற்கிறான். திருவிக்கிரமனது
இடதுகாலுக்குச் சமீபத்தில் கருடன் சுக்கிரனது முதுகிலேறிக் கொண்டு,
மாவலியின் கொடையைத் தடுத்ததற்காகத் துன்புறுத்துகிறான், வடக்குச்
சுவரின் மாடத்தில் வைகுண்ட நாரயணனது பிரதிமையிருக்கிறது. தேவர்கள்
தங்களைத் துன்புறுத்துபவனாகிய இரணியனைக் கொல்லுமுருவத்தைக்
கண்டு களிக்க, ஸ்வாமி அபயாஸ்தங் கொடுப்பது போலிருக்கிறது.
இவ்விரண்டு கோயில்களும் மலையைக் குடைந்தே தூண், கொடுங்கை,
மேடை, விக்கிரகமெல்லாம் செய்யப்பட்டுள்ளன.

     நரசிம்மசுவாமிக்கும், இரங்கநாதசுவாமிக்கும் முறையே தமிழ்ப்
பழம்யெர்; சிங்கப் பெருமாள், பள்ளிகொண்ட பெருமாள் எனச் சாசனங்
கூறுகிறது. இதுவடகொங்கு ஏமூர்நாடு. இந்நூல் 42-வது செய்யுளின் கீழ்
நோக்குக. 1906 uத்திய சாசன பரிசோதனை அறிக்கை பக்கம் 74, 75, 76.